Published:Updated:

நெல்லை: ``அருமையான திட்டம் ஆனால்..!" - அன்புச் சுவர் விவகாரத்தில் குமுறும் சமூக ஆர்வலர்கள்!

அன்புச் சுவர்
News
அன்புச் சுவர்

இப்போது உபயோகப்படுத்தப்பட்ட ஆடைகளை தவிர வேறு எந்த பொருட்களையும் பொதுமக்கள் கொண்டு வைப்பதாக தெரியவில்லை.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரி பணியாற்றியபோது, அவர் மனதில் தோன்றிய புரட்சித் திட்டம் தான் 'அன்புச் சுவர்'. இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கம், 'இல்லாதவர்களுக்குக் கொடுப்போம் இயன்றதை!' என்பதாகும். அதாவது நமக்குத் தேவையில்லை எனத் தூக்கி வீசப்படும் பொருள் மற்றவருக்குப் பயனுள்ளதாக இருக்கலாம். குறிப்பாக ஏழைகளுக்கு இந்த நோக்கத்தோடு உருவானதுதான் அன்புச் சுவர். நெல்லை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகிலிருக்கும் சாலையோர சுவரின் ஒரு பகுதியில் சிறிய நிழற்குடை அமைத்து அதன் கீழ் பயனற்ற, பயனுள்ள பொருள்களை வைப்பதற்கான அறைகள் மற்றும் துணிகளை வைப்பதற்கான கூடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அன்புச் சுவர்
அன்புச் சுவர்

இந்தத் திட்டம் தொடங்கிய நேரத்தில், பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்திய நல்ல நிலையில் உள்ள ஆயத்த ஆடைகளை மட்டுமல்லாமல் வீட்டில் உபயோகப்படுத்தாமல் வைத்திருந்த வேறு சில பொருள்களையும் கூட கொண்டுவந்து வைத்தனர். குறிப்பாகச் சிறு குழந்தைகள் ஓட்டிப்பழகும் 3 சக்கர சைக்கிள், சிறிய விளையாட்டுப் பொருள்கள் மற்றும் பொம்மைகள், வீட்டு உபயோக பாத்திரங்கள் போன்றவற்றையும் இங்கு கொண்டுவந்து வைத்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அன்புச் சுவர்
அன்புச் சுவர்

அப்படி வைக்கப்பட்ட பொருள்கள் அடுத்த சில நிமிடங்களில் ஏழைகளால் எடுத்துச் செல்லப்பட்டன. ஆனால், தற்போது 'அன்புச் சவர்' திட்டத்தில் தொய்வு ஏற்பட்டு விட்டது. மக்கள் உபயோகப்படுத்தப்பட்ட ஆடைகளைத் தவிர வேறு எந்த பொருள்களையும் இங்குக் கொண்டு வந்து வைப்பதாகத் தெரியவில்லை.

ஆயத்த ஆடைகள் மட்டும் அதிக அளவில் கொண்டு வந்து இங்கு வைக்கப்படுகின்றன. ஒன்றின் மீது ஒன்றாகக் குவித்துப் போடும்போது, அதைத் தேவைக்காக எடுப்பவர்கள் கலைத்துப் போட்டு விடுகின்றனர். ஒருசிலர் ஆடைகளைக் கூடைக்கு வெளியே வீசிவிட்டுச் சென்று விடுகின்றனர்.

அன்புச் சுவர்
அன்புச் சுவர்

``இந்த நிலை மாற வேண்டும். இந்த 'அன்புச் சுவரில்' ஆரம்பக் காலத்தில் வைக்கப்பட்டது போல ஆடைகள் மட்டுமின்றி வீடுகளில் உபயோகப்படுத்தப்பட்ட தேவையற்ற நல்ல நிலையில் உள்ள பொருள்களையும் மக்கள் கொண்டு வந்து வைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். எனவே, இந்த அன்புச் சுவர்ப் பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் விளக்க போர்டு வைக்க வேண்டும். மேலும், மக்கள் அதிகம் நடமாடும் மாநகரின் 4 மண்டலங்களிலும் இந்த 'அன்புச் சுவர்' திட்டத்தை விரிவுபடுத்தி, மக்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை" என்று ஆதங்கப்படுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அன்பின் சுவரை வலுப்படுத்தி, எளியோர் வாழ்வு மேம்பட மாவட்ட நிர்வாகம் இவர்களின் கோரிக்கையைப் பரிசீலித்து, நடவடிக்கை எடுக்குமா? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

- மாணவப் பத்திரிகையாளர்