Published:Updated:

`பஸ் டிக்கெட்டுடன் கொரோனா தொற்று இலவசம்?' - அதிர்ச்சியூட்டும் நெல்லைப் பேருந்துக் காட்சிகள்

நெரிசல் மிகுந்த பஸ் பயணம்
நெரிசல் மிகுந்த பஸ் பயணம்

குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், கட்டுமானம் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் ஒரே நேரத்தில் பேருந்தில் பயணிக்க வருவதால் கூட்டம் அலைமோதுகிறது. 

கொரோனா பரவலைத் தடுக்க கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பொதுமக்களின் நலன் கருதி தமிழகம் முழுவதும் 50 சதவிகித பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தனிமனித இடைவெளி இன்றிப் பயணிக்கும் பயணிகள்
தனிமனித இடைவெளி இன்றிப் பயணிக்கும் பயணிகள்

ஒவ்வொரு மண்டலத்துக்குள்ளும் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் எந்த அனுமதியும் இல்லாமல் தங்கள் மண்டலங்களுக்குள் உள்ள மாவட்டங்களுக்குள் பயணிக்க முடிகிறது. குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. சில பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்கும் சூழலும் உள்ளது.

 `ஒரு மாத சம்பளம்; பயணிகளுக்கு இலவச மாஸ்க்!’ - அசத்தும் தேனி அரசுப் பேருந்து நடத்துநர்

பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பதுடன் தனிமனித இடைவெளி விட்டு அமர வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனால், நெல்லை மாநகரப் பேருந்துகள் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

`காய்ச்சல் இருந்தால் பயணம் செய்யாதீர்கள்!' - டிராவலர்களுக்கான கொரோனா வைரஸ் அலர்ட் #CoronaVirus

பேருந்துகளில் தனிமனித இடைவெளியின்றி ஏறும் பயணிகளை நடத்துநர் இறங்குமாறு தெரிவித்தாலும் யாரும் அதைப் பொருட்படுத்துவதில்லை. அதனால் சில பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணிக்கும் அவலமும் நடக்கிறது.

பேருந்துகளில் பயணம் செய்பவர்களில் பலர் முகக் கவசம் அணிவதில்லை. அடுத்தடுத்து ஒட்டி உட்கார்ந்துகொண்டும் நின்று கொண்டும் பயணம் செய்யும் நிலையில், முகக் கவசம் அணியாமல் இருமுவது, தும்முவது போன்ற செயல்களில் ஈடுபடுவது சக பயணிகளை அச்சமடைய வைத்துள்ளது.

நெரிசலுடன் பேருந்து பயணம்
நெரிசலுடன் பேருந்து பயணம்

இதுபற்றி பஸ் பயணிகள் கூறுகையில், ``வாழ்வாதாரப் பிரச்னைகளுக்காகப் பேருந்தில் பயணம் செய்கிறோம். ஆனால், ஒரு சிலர் மிகவும் அலட்சியமாக முகக்கவசம் இல்லாமல் பயணிப்பதால் பேருந்துகளில் செல்லும் ஊருக்கு மட்டும் அல்லாமல் கொரோனா தொற்றுக்கும் சேர்த்து டிக்கெட் எடுக்கிறோமோ என்கிற கவலை ஏற்படுகிறது” என்கிறார்கள் வேதனையுடன்.

அடுத்த கட்டுரைக்கு