Published:Updated:

50 வயதில் காதணி விழா; தந்தையின் சிறுவயது ஆசையை நிறைவேற்றி விருந்து வைத்த மகன்கள்!

காதணி விழா

சிறுவயதில் நிறைவேறாத ஆசையை மகன்களும், உறவினர்களும் நிறைவேற்றி வைத்துள்ளனர்.

50 வயதில் காதணி விழா; தந்தையின் சிறுவயது ஆசையை நிறைவேற்றி விருந்து வைத்த மகன்கள்!

சிறுவயதில் நிறைவேறாத ஆசையை மகன்களும், உறவினர்களும் நிறைவேற்றி வைத்துள்ளனர்.

Published:Updated:
காதணி விழா

இதுக்குதான் ஆசைப்படணும், இந்த வயசுலதான் ஆசைப்படணும் என எந்தவொரு வரையறையும் இல்லை. பலரும் சிறுவயதில் தங்களின் நிறைவேறாத ஆசைகளை தாங்கள் வளர்ந்த பிறகு நிறைவேற்றியிருக்கின்றனர். அதற்கு ஏற்றார் போல் தனது சிறு வயது ஆசையை தற்போது தன் மகன்களிடம் கூறியுள்ளார் 50 வயது நபர்.

ரிஷிவந்தியம் ஒன்றியம் ஜம்படை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கு 45 வயதில் சங்கீதா என்ற மனைவியும், 22 வயதில் வேடியப்பன், 20 வயதில் மணி என்ற இரு மகன்களும் உள்ளனர். குடும்பத்தின் வறுமை காரணமாக ஏழுமலைக்கு சிறு வயதில் அவரது பெற்றோர் மொட்டை அடித்து காது குத்தாமல் விட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

காதணி விழா
காதணி விழா

இந்நிலையில் தற்போது இந்த ஆசையை அவர் தனது மகன்கள் மற்றும் உறவினர்களிடம் கூறி வேதனை அடைந்துள்ளார். இதைக் கேட்ட அவரின் இரு மகன்களும், உறவினர்களும் ஏழுமலையின் சிறுவயது ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து ஜம்படை என்ற கிராமத்தில் உள்ள அவர்களது குலதெய்வ கோவிலில் தனது மகன்கள் மற்றும் உறவினர்கள் சூழ்ந்து நிற்க ஏழுமலைக்கு மாமா மடியில் அமர்ந்து மொட்டை அடித்து காது குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட உறவினர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு அசைவ விருந்தும் அளிக்கப்பட்டுள்ளது .