Published:Updated:

``மனிதநேயம் மட்டும்தான் நிலைத்து நிற்கிறது!" - சௌமியா திருமணத்தில் ராதாகிருஷ்ணன் நெகிழ்ச்சி

திருமணம்

``சௌமியா திருமணம் மனிதநேயத்தின் உச்சம்" என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் வாழ்த்தியிருக்கிறார்.

``மனிதநேயம் மட்டும்தான் நிலைத்து நிற்கிறது!" - சௌமியா திருமணத்தில் ராதாகிருஷ்ணன் நெகிழ்ச்சி

``சௌமியா திருமணம் மனிதநேயத்தின் உச்சம்" என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் வாழ்த்தியிருக்கிறார்.

Published:Updated:
திருமணம்

சுனாமி பேரலையில் ஒன்பது மாதக் குழந்தையாக மீட்கப்பட்டு, தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அரவணைப்பில் வளர்ந்த சௌமியாவுக்கு நாகையில் நேற்று (06.02.2022)  திருமணம் சிறப்பாக நடந்தது. இதில் ராதாகிருஷ்ணன் மனைவியுடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

திருமணம்
திருமணம்

தமிழகத்தில் கடந்த 2004 -ம் ஆண்டு சுனாமிப் பேரலையின் தாக்கத்தால் 6 ஆயிரத்து 65 பேர் உயிரிழந்தனர். இதில் நாகை மாவட்டத்தில் மட்டும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, உயிர்களையும் உடைமைகளையும் பறிகொடுத்தனர். மேலும், ஏராளமான குழந்தைகள் பெற்றோரை இழந்தனர்.  அரசால் 'அன்னை சத்யா இல்லம்' என்பது தொடங்கப்பட்டு, பெற்றோரை இழந்த 99 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டனர். அவர்களில் ஒன்பது மாதக் குழந்தையான சௌமியா, மூன்று மாதக் குழந்தையான மீனா ஆகிய இரண்டு பச்சிளம் குழந்தைகளை அப்போது நாகை கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணன் தத்தெடுத்து வளர்த்தார். பல்வேறு இடங்களுக்குப் பணி மாறுதலில் ராதாகிருஷ்ணன் சென்றாலும், நாகைக்கு வந்து குழந்தைகளோடு நேரத்தைச் செலவிட்டு அவர்களது கல்வி  வளர்ச்சிக்கும் அதிக பங்களிப்பைச் செலுத்தி பராமரித்துவந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் சௌமியா, மீனா இரண்டு பேரையும் 18 வயதைத் கடந்த பின்னர் நாகை புதிய கடற்கரை சாலையில் வசிக்கும்  மணிவண்ணன் - மலர்விழி  தம்பதியர்  தத்தெடுத்து வளர்த்துவந்தனர். இதையடுத்து சௌமியாவுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. நேற்று  நாகை ஆபீசர்ஸ் கிளப்பில் திருமணம் நடந்தது. சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் திருமணத்துக்கு தலைமை வகித்தார். நாகை கலெக்டர் அருண்தம்புராஜ்,  எஸ்.பி ஜவஹர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். சுகாதாரத்துறைச் செயலாளர் ஆதரவில் வளர்ந்த தனக்கு திருமணம் நடந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக சௌமியா கூறினார்.

சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வாழ்த்திப் பேசுகையில், ``சுனாமி பேரலையின்போது விவரம் தெரிந்த பல குழந்தைகள் பெற்றோரை இழந்த நிலையில் மீட்கப்பட்டாலும், சொந்தம், பந்தம் என எதுவும் அறியாத பச்சிளம் குழந்தைகளாக சௌமியா, மீனா ஆகியோரை மீட்டெடுத்தோம்.

திருமணம்
திருமணம்

அதில்  சௌமியா  திருமணம் நடைபெறுகிறது. மலர்விழி, மணிவண்ணன் தம்பதியர் பாதுகாவலர்களாக சௌமியாவை வளர்த்தாலும், பெற்ற மகளைபோல் சௌமியாவுக்குத் திருமணம் செய்துவைத்துள்ளனர். இதைப் பார்க்கும்போது மனிதநேயம் மட்டும்தான் இதுநாள் வரை நிலைத்து நிற்கிறது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism