Published:Updated:

நீலகிரியில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை; முன்னேற்பாடுகள் தீவிரம் என மாவட்ட ஆட்சியர் தகவல்!

தென்மேற்குப் பருவமழை

இந்த ஆண்டு நீலகிரியில் தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் அதிகம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், மழை பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம்காட்டிவருகிறது.

நீலகிரியில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை; முன்னேற்பாடுகள் தீவிரம் என மாவட்ட ஆட்சியர் தகவல்!

இந்த ஆண்டு நீலகிரியில் தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் அதிகம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், மழை பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம்காட்டிவருகிறது.

Published:Updated:
தென்மேற்குப் பருவமழை

நடப்பு ஆண்டில் அதிக அளவிலான மழைப் பொழிவைப் பெற்றுவரும் நீலகிரி மாவட்டத்தில், மே மாதம் முழுவதுமே பரவலாக நல்ல மழை பெய்துவந்தது. இதனால் இந்த ஆண்டு நீலகிரியில் காட்டுத் தீ அபாயம் வெகுவாகக் குறைந்தது. குடிநீர் ஆதாரமாக விளங்கிவரும் நீர்நிலைகளில் நீர் இருப்பு போதிய அளவில் இருக்கிகிறது. இந்த நிலையில், ஊட்டியில் தற்போது தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருக்கிறது. ஊட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதலே தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இடைவிடாமல் பெய்துவரும் இந்த மழை காரணமாக ஊட்டி நகரில் பல சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்திருக்கிறது.

தென்மேற்கு பருவமழை
தென்மேற்கு பருவமழை

தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருப்பதால் நீர்மின் உற்பத்திக்கான அணைகளான அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு போன்ற அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது. இந்த ஆண்டு நீலகிரியில் தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் அதிகம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், மழை பாதிப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டிவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நம்மிடம் பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஐ.ஏ.எஸ்., ``நீலகிரியில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்தால் எதிர்கொள்வதற்கு அனைத்து வகையிலும் தயார்நிலையில் இருக்கிறோம். பொதுப்பணித்துறை, தீயணைப்பு, மீட்புக்குழுவினர், வருவாய்த்துறை என அனைத்து அரசுத்துறைகளும் போர்க்கால அடிப்படையில் களத்தில் இறங்கத் தயார்நிலையில் இருக்கிறோம்.

தென்மேற்குப் பருவமழை
தென்மேற்குப் பருவமழை

சாலைகளில் மரங்கள் விழுந்தால் அகற்ற அறுவை இயந்திரங்கள், மண்சரிவை அகற்ற ஜே.சி.பி இயந்திரங்கள் என எல்லாம் தயாராக வைத்திருக்கிறோம். மீட்பு முகாம்களும் தயாராக இருக்கின்றன. அரசுத்துறை அலுவலர்களுடன் அடிக்கடி ஆலோசனைக் கூட்டங்கள் நடத்திவருகிறோம். வெள்ளநீர் தேங்கும் பகுதிகளில் முறையான வடிகால்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வடிநீர்க்கால்வாய்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டிருக்கின்றன" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism