Published:Updated:

`பரிசீலனையில் மதுரை டு காசி தனியார் ரயில் சேவை’ - தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்

ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா

``பாம்பன் புதிய மேம்பாலப் பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும்.” - ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா

`பரிசீலனையில் மதுரை டு காசி தனியார் ரயில் சேவை’ - தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்

``பாம்பன் புதிய மேம்பாலப் பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும்.” - ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா

Published:Updated:
ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா

கோவையிலிருந்து ஷீர்டிக்கு முதல் தனியார் ரயில் சேவை தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் `அடுத்ததாக மதுரையிலிருந்து காசிக்கு பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் தனியார் ரயில் சேவை தொடங்கப்படும்’ என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பி.ஜி. மல்லையா தெரிவித்தார்.

சுங்குடிச் சேலை விற்பனை மையம்
சுங்குடிச் சேலை விற்பனை மையம்

மதுரை வந்திருந்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் சமீபத்தில் ரயில் சேவை தொடங்கப்பட்ட மதுரை - தேனி ரயில் பாதையை ஆய்வு செய்தார். தொடர்ந்து சாலை மார்க்கமாக சென்று தேனி - போடிநாயக்கனூர் பகுதியில் நடைபெற்றுவரும் அகல ரயில் பாதை பணிகளையும் ஆய்வுசெய்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன் பின்பு மதுரை ரயில் நிலையத்துக்கு வந்தவர் 'ஒரு நிலையம் ஒரு பொருள்' திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட மதுரையின் பிரபலமான சுங்குடி சேலை விற்பனையகத்தைப் பார்வையிட்டார். ரயில் நிலைய வெளி வளாகப்பகுதியில் மழைநீர் சேகரிப்பு ஏற்பாடுகளையும் ஆய்வுசெய்தார்.

ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா
ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா

பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், "தேனி - போடி இடையிலான அகல ரயில் பாதை திட்டம் வருகிற ஆகஸ்ட் மாதம் நிறைவடையும். பாம்பன் புதிய மேம்பாலப் பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாரத் கெளரவ் திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் மதுரை - காசி இடையிலான தனியார் ரயில் சேவை திட்டத்துக்கு வந்திருக்கும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுவருகின்றன.

காரைக்குடி - திருவாரூர் ரயில் பாதையில் கேட் கீப்பர்களாக முன்னாள் ராணுவத்தினரை பணியமர்த்தும் வேலைகள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் அந்த மார்க்கத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.

சுங்குடி சேலை விற்பனை மைய்யம்
சுங்குடி சேலை விற்பனை மைய்யம்

பொது மேலாளருடன் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் ஆனந்த் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism