Published:Updated:

``நீதிபதி ஆகவேண்டும் என்பதே என் லட்சியம்!" - நீலகிரியின் முதல் திருநங்கை வழக்கறிஞர் சௌமியா சாசு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திருநங்கை வழக்கறிஞர் சௌமியா சாசு
திருநங்கை வழக்கறிஞர் சௌமியா சாசு

பல்வேறு இடர்களையும் சவால்களையும் கடந்து நீலகிரி மாவட்டத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞராக ஊட்டி நீதிமன்றத்தில் தடம் பதித்திருக்கிறார் சௌமியா சாசு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சில ஆண்டுகளுக்கு முன்பு சக திருநங்கைகளோடு ஊட்டிக்கு சுற்றுலா வந்த சௌமியா சாசுவுக்கு இந்த ஊரும், மக்களும் ரொம்பப் பிடித்துப்போக, இந்த ஊரையே வாழிடமாக தேர்வு செய்துவிட்டார். நேர்மையான முறையில் உழைத்து வாழ்வை நடத்துவதோடு தோழமையில் இருந்த சக திருநங்கைகளையும் நல்வழிப்படுத்தி, 7 ஆண்டுகளுக்கு மேலாக ஊட்டியில் வசித்து வருகிறார். கல்வியில் அதிகம் நாட்டம் கொண்ட சௌமியா இளங்கலை அறிவியல் பட்டம் முடித்திருந்தார்.

திருநங்கை வழக்கறிஞர் சௌமியா சாசு
திருநங்கை வழக்கறிஞர் சௌமியா சாசு
``மத்தவங்க புறக்கணிச்சப்போ கல்விதான் நம்பிக்கை கொடுத்துச்சு!" - திருநங்கை நாட்டுப்புறக் கலைஞர் வர்ஷா

அதே துறையில் முதுகலை பயில்வதா அல்லது சட்டம் பயில்வதா என்ற குழப்பத்தில் இருந்தவர், சமூக வலைதள நண்பர்களின் வழிகாட்டுதல் மற்றும் உதவியோடு கடந்த 2017-ம் ஆண்டு சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் தற்போது சட்டப் படிப்பை நிறைவு செய்திருக்கிறார். தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்ததோடு, ஊட்டியில் உள்ள ஒரு வழக்கறிஞரிடம் ஜுனியராக சேர்ந்து நீலகிரியின் முதல் திருநங்கையாக ஊட்டி கோர்ட்டில் தடம் பதித்திருக்கிறார்.

ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞராக கறுப்பு கவுனுடன் கம்பீரமாக வலம் வந்த சௌமியா சாசுவை சந்தித்து விகடனின் வாழ்த்துகளைத் தெரிவித்துப் பேசினோம்.

``எனக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம். ஆனாலும், யார் கேட்டாலும் ஊட்டிதான் என்னோட ஊர்னு பெருமையா செல்லுவேன். இந்த மக்கள் எங்களை மரியாதையா நடத்துறாங்க. யார் நம்மளை புறக்கணிச்சாலும் பரவாயில்ல... நாலு பேர் சொல்லுற மாதிரி வாழணும். அதான் என்னோட லட்சியம்.

திருநங்கை வழக்கறிஞர் சௌமியா சாசு
திருநங்கை வழக்கறிஞர் சௌமியா சாசு

ஃபேஸ்புக் நண்பர்கள் எனக்கு வழிகாட்டினாங்க. அதுபடியே திருச்சி சட்டக் கல்லூரியில விண்ணப்பிச்சேன். சீட் கிடைச்சது. காலேஜ்ல சேர்ந்த ரெண்டாவது நாளே என்னோட சக மாணவிகள்கிட்ட, `நான் ஒரு திருநங்கை'னு சொல்லிட்டேன். ஒரு சில நாள்ல என்னோட கிளாஸ்ல எல்லாருக்கும் அது தெரிஞ்சிடுச்சு. ஆனாலும் ஒருத்தர் கூட என்கிட்ட மனம் நோகுற மாதிரி நடந்துக்கல. என்னை ஒரு பெண்ணாதான் நடத்தினாங்க, ஏத்துக்கிட்டாங்க. கொரோனாவால இடையில கொஞ்சம் படிப்பு பாதிச்சது. தளராமப் படிச்சேன். என்னைச் சுத்தி இருக்குற எல்லாருமே எல்லா வகையிலும் எனக்கு ஹெல்ப் பண்ணாங்க. படிப்பை முடிச்சிட்டு வழக்கறிஞரா ஊட்டிக்குத் திரும்புனேன். வழக்கறிஞர் பீம்ராஜ் சார்கிட்ட ஜுனியரா சேர்ந்திருக்கேன்.

``சாதிக்கணும்ன்ற எண்ணம் மட்டும்தான் மனசுல இருந்துச்சு!" - தமிழகத்தின் 2-வது திருநங்கை எஸ்.ஐ சிவன்யா

திருநங்கைகளோட வாழ்வு மேம்பட கல்வி ஒண்ணுதான் ஒரே வழி. நீதிபதியானா, எங்க மக்கள் நல்ல நிலைமைக்கு வர என்னால உதவ முடியும்னு நம்புறேன். நீதிபதி ஆகணும் என்பதுதான் மனசுல ஓடிக்கிட்டு இருக்கு. அதுவரை ஓயமாட்டேன்" என்று உறுதியாகச் சொல்லி முடித்தார் சௌமியா சாசு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு