Published:Updated:

"அந்த 13 லட்ச ரூபாய் என்னுடையது அல்ல!" - ரெய்டு குறித்து ரகசியம் உடைத்த எஸ்.பி.வேலுமணி

``அம்மா மறைந்த பிறகு, ஆட்சி தொடர, கட்சி ஒற்றுமையாக இருக்க நான் முக்கியக் காரணம். இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக, பழிவாங்க போடப்பட்ட வழக்கு” - எஸ்.பி.வேலுமணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சட்டசபை கூட்டத்தொடர், லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு போன்ற பரபரப்புக்கு மத்தியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று கோவைக்கு வருகை தந்தார். ரெய்டு நடவடிக்கையை அரசியல் காழ்புணர்ச்சி என்று கூறுவதால், வேலுமணி வருகையைக் கொண்டாட அ.தி.மு.க-வினர் முடிவெடுத்தனர்.

போக்குவரத்து நெருக்கடி
போக்குவரத்து நெருக்கடி
ஊரெல்லாம் பினாமி கம்பெனிகள்... ஆர்.டி.ஐ அம்பலப்படுத்தும் வேலுமணி நெட்வொர்க்!

கோவை முழுவதுமிருந்து 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மக்களை அழைத்துக்கொண்டு விமான நிலையத்துக்குப் படையெடுத்தனர். ஏற்கெனவே, அவிநாசி சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்துவருகின்றன. இதனால், அவிநாசி சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசலில் முடங்கி மக்கள் தவித்தனர்.

கொரோனா மூன்றாவது அலையில் கோவைதான் அதிகம் பாதிக்கும் என அதிகாரிகள் எச்சரித்தும் பயனில்லை. கோவை விமான நிலையத்தில் திரும்பிய பக்கமெல்லாம் இடைவெளியே இல்லாமல் மக்கள் நெருங்கி நகர்ந்துகொண்டனர். ஜமாப் இசை, அ.தி.மு.க கொடிகளுடன் வேலுமணிக்கு தடபுடல் வரவேற்பளித்தனர்.

அ.தி.மு.க-வினர்
அ.தி.மு.க-வினர்

கோவைக்கு வந்த வேலுமணிக்கு சால்வை போர்த்தி, மலர் கொத்துகள் கொடுத்து ஓப்பன் வாகனத்தில் ஏற்றிவிட்டனர். தொண்டர்களைப் பார்த்து வேலுமணி கையசைக்க, அவர்கள் வழக்கம்போல, ``தானைத் தலைவர் எஸ்.பி.வி வாழ்க...” என்று கோஷம் போட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வேலுமணி, ``தி.மு.க அரசால் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக என்மீது பொய் வழக்கு போட்டு, என் சம்பந்தப்பட்ட மற்றும் சம்பந்தமில்லாத இடங்களில் காவல்துறையை ஏவி ரெய்டு நடத்தினர். அந்த நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்,

வேலுமணி
வேலுமணி

முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள், கோவை மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வழக்கு நடந்துகொண்டிருப்பதால் நான் அதற்குள் போக விரும்பவில்லை. இந்த வழக்கைச் சட்டரீதியாகச் சந்திப்போம்.

50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை நான் ஐந்து ஆண்டுகளில் கோவைக்குப் பெற்றுத் தந்திருக்கிறேன். அதனால் கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் எங்களை வெற்றி பெறவைத்து மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். சோதனையில் ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பத்திரிகைச் செய்தியில் பார்த்தேன்.

வேலுமணி ரெய்டு
வேலுமணி ரெய்டு

என் வீட்டிலோ, உறவினர்கள் வீட்டிலோ அந்தப் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை. அது தவறான தகவல். அதேபோல, என் வங்கிக் கணக்கு முடக்கப்படவில்லை. இப்படித் தவறான தகவலை வெளியிடுவது வருத்தமளிக்கிறது.

நான் கடவுள் நம்பிக்கைகொண்டவன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலைக்குச் செல்கிறேன். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதியரசர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. அம்மா மறைந்த பிறகு, ஆட்சி தொடர, கட்சி ஒற்றுமையாக இருக்க நான் முக்கியக் காரணம். இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக, பழிவாங்கப் போடப்பட்ட வழக்கு.

வேலுமணி
வேலுமணி

நான் உள்ளாட்சித்துறையில் இருந்தபோது 148 விருதுகள் பெற்று, யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளோம். அதிக அளவு கிராம சாலைகளைப் போட்டிருக்கிறோம். கோவை மக்களுக்கு நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு