Published:Updated:

தேங்கி நிற்கும் வெள்ளம்: `3 நாளா கரன்ட் இல்லை; வந்தாலும் பயமா இருக்கு!’ - செம்மஞ்சேரி ஸ்பாட் விசிட்

செம்மஞ்சேரி

செம்மஞ்சேரியில் தண்ணீர் வடிவதற்கு வழி இருந்திருக்கும். அங்கேயும் சுவரோ, வீடோ கட்டியிருப்பார்கள். வடியும் வழியைக் கண்டறிந்தால் மட்டுமே மழைநீர் தேங்காமல் இருக்கும்.

தேங்கி நிற்கும் வெள்ளம்: `3 நாளா கரன்ட் இல்லை; வந்தாலும் பயமா இருக்கு!’ - செம்மஞ்சேரி ஸ்பாட் விசிட்

செம்மஞ்சேரியில் தண்ணீர் வடிவதற்கு வழி இருந்திருக்கும். அங்கேயும் சுவரோ, வீடோ கட்டியிருப்பார்கள். வடியும் வழியைக் கண்டறிந்தால் மட்டுமே மழைநீர் தேங்காமல் இருக்கும்.

Published:Updated:
செம்மஞ்சேரி

சென்னை கூவம் ஆற்றின் கரையோரம் இருந்த மக்களும், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களும் குடிசை மாற்று வாரியத்தால் சென்னைக்கு வெளியே செம்மஞ்சேரி, கண்ணகி நகர், பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் குடியமர்த்தப்பட்டார்கள். தாழம்பூர், படூர் போன்ற ஏரிகளில் தண்ணீர் திறந்துவிட்டால் செம்மஞ்சேரி என்று பெயரிலேயே ஏரி சுமந்த இடத்தில் வெள்ளம் பெருகும்.

செம்மஞ்சேரி
செம்மஞ்சேரி

செம்மஞ்சேரயில் இரண்டு அடுக்கு வீடுகள் உள்ளன. மழைத்தண்ணீர் கீழ் அடுக்கு வீட்டுக்குள் போனதால், சமைக்க முடியாமல் அரசு கொடுக்கும் உணவு வகைகளை உண்டுவருகிறார்கள். கொசுக்கடி, பூச்சி, புழு போன்ற பிரச்னைகளால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் இருக்கிறது. கழிவறை போன்ற அடிப்படைத் தேவைகளுக்கே பெண்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். மேல் மாடியில் இருக்கும் வீட்டைக் கேட்டுக் கேட்டுப் பயன்படுத்துகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செம்மஞ்சேரி
செம்மஞ்சேரி

``ஏரில தண்ணீர் திறந்துவிட்டால் முறையா தகவல் வர்றதில்லை. எங்களால எங்க பொருளைக் காப்பாத்திக்க முடியலை” என்று வருந்தும் மக்கள், மூன்று நாள்களாக கரன்ட் இல்லாம தவிக்கிறார்கள். தற்போது மின்சாரம் வந்துவிட்டாலும் உயிர்ச்சேதம் ஏற்படுமோ என்ற அச்சத்துடனே வாழ்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து சமூகச் செயற்பாட்டாளர் இசையரசு அவர்களிடம் பேசினோம்... செம்மஞ்சேரியில் கழிவுநீர் வடிகால்கூட இல்லை என்ற அதிர்ச்சித் தகவலைத் தந்தார். மேலும், ``மழைக்காலங்களில் செம்மஞ்சேரியிலிருந்து வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சிறப்பு போக்குவரத்து வசதி செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

செம்மஞ்சேரி
செம்மஞ்சேரி

இது குறித்து நீரிய வல்லுநரும், பேராசிரியருமான ஜனகராஜன் கூறுகையில், ``செம்மஞ்சேரியில் உள்ள மழைநீர் வடிய வேண்டுமென்றால் உயராய்வு (Elevatin survey) எடுக்க வேண்டும். தண்ணீர் வடிவதற்கு வழி இருந்திருக்கும். அங்கேயும் சுவரோ, வீடோ கட்டியிருப்பார்கள். வடியும் வழியைக் கண்டறிந்தால் மட்டுமே மழைநீர் தேங்காமல் இருக்கும்” என்றார்.

- கு.சௌமியா

மாணவப் பத்திரிகையாளர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism