Published:Updated:

ராமேஸ்வரம் மீனவர்கள்மீது இலங்கை கடற்படை தாக்குதல்! - வலைகளை அறுத்து கடலில் வீசியதாகக் குற்றச்சாட்டு

ராமேஸ்வரம் துறைமுகம்

ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி, வலைகளை கடலில் அறுத்து எறிந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள்மீது இலங்கை கடற்படை தாக்குதல்! - வலைகளை அறுத்து கடலில் வீசியதாகக் குற்றச்சாட்டு

ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி, வலைகளை கடலில் அறுத்து எறிந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
ராமேஸ்வரம் துறைமுகம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திலிருந்து மீன்வளத்துறை அனுமதி பெற்று 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது ஐந்து ரோந்துக் கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.

வேலைநிறுத்தத்தில் தமிழக மீனவர்கள்
வேலைநிறுத்தத்தில் தமிழக மீனவர்கள்

மேலும் 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த வலைகளை அறுத்து கடலில் வீசிவிட்டு விரட்டியடித்துள்ளனர். இதனால் மீனும் பிடிக்க முடியாமல், வலைகளும் அறுக்கப்பட்டதால் பல ஆயிரம் ரூபாய் இழப்புடன் மீனவர்கள் கரை திரும்பினர்.

ஒரு லட்சம் வரை செலவு செய்து மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் நிலையில் நாளுக்கு நாள் இலங்கை கடற்படையினரின் தாக்குதல் அதிகரித்துவருவதால் மீன்பிடிக்கச் செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளதாக ராமேஸ்ரம் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் கச்சத்தீவு பாரம்பர்ய இடத்தில் மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism