Published:Updated:

`இங்குதான் பிறந்தேன்; இலங்கை கலாசாரம் தெரியாது!'-குடியுரிமைச் சட்டத்தால் கலங்கும் சேலம் முகாம் அகதி

எந்தன்

நான் இலங்கை அகதியாக இருந்தாலும் ஒருநாள் இந்தியக் குடியுரிமை பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது.

`இங்குதான் பிறந்தேன்; இலங்கை கலாசாரம் தெரியாது!'-குடியுரிமைச் சட்டத்தால் கலங்கும் சேலம் முகாம் அகதி

நான் இலங்கை அகதியாக இருந்தாலும் ஒருநாள் இந்தியக் குடியுரிமை பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது.

Published:Updated:
எந்தன்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் கலவர பூமியாக மாறி வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் தாரமங்கலம் பவளத்தானூர் அகதிகள் முகாமைச் சேர்ந்த ஒரு இளைஞர் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மூலம் என்னை இலங்கைக்கு அனுப்புவதைவிடக் கருணைக் கொலை செய்துவிடுமாறு ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்திருக்கிறார்.

இதுபற்றி பவளத்தானூர் அகதி முகாமைச் சேர்ந்த எந்தனிடம் பேசினோம். '' இலங்கையில் ஏற்பட்ட போர் காரணமாக என் பெற்றோர்கள் அங்கு வாழ முடியாது என்று முடிவெடுத்து 1990-ம் ஆண்டு இந்தியாவுக்கு அகதிகளாக வந்து தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டம் பவளத்தானூர் அகதிகள் முகாமில் தங்கினார்கள். அவர்கள் இந்த முகாமுக்கு வந்த பிறகு, ஒரு வருடம் கழித்து 1991-ல் இங்கு பிறந்தேன்.

அமித் ஷா
அமித் ஷா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் தமிழ்நாட்டில்தான் தவழ்ந்து நடை பழகி வாழ்ந்து வருகிறேன். தற்போது எனக்கு 28 வயதாகிறது. நான் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு தற்போது பெயின்ட் அடிக்கும் வேலைக்குச் சென்று வருகிறேன். எனக்குத் தமிழ்நாட்டுக் கலாசாரம், பண்பாடு, நாகரிகம் மட்டும்தான் தெரியும். இலங்கையின் கலாசாரத்தைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

நான் இலங்கை அகதியாக இருந்தாலும் ஒருநாள் இந்தியக் குடியுரிமை பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது. ஆனால், தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மூலம் எனக்கும் எங்கள் மக்களுக்கும் என்றைக்குமே குடியுரிமை கிடைக்க வாய்ப்பில்லை. இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறோம். என்னை இந்தியாவை விட்டு அனுப்புவதை விட இங்கேயே கருணைக் கொலை செய்து விடுங்கள். எங்களுக்கு நேர்ந்த கொடுமை எங்கள் சந்ததிகளுக்கும் ஏற்படக் கூடாது'' என்றார் கண்ணீருடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism