Published:Updated:

இலங்கையில் நீடிக்கும் நெருக்கடி நிலை... தொடரும் அகதிகள் வருகை! - மரைன் போலீஸார் விசாரணை

இலங்கை அகதிகள்

தமிழ்நாட்டுக்குள் இலங்கை மக்கள் அகதிகளாக நுழையாத வகையில் அந்நாட்டு கடேலார காவல்படை சார்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இலங்கையில் நீடிக்கும் நெருக்கடி நிலை... தொடரும் அகதிகள் வருகை! - மரைன் போலீஸார் விசாரணை

தமிழ்நாட்டுக்குள் இலங்கை மக்கள் அகதிகளாக நுழையாத வகையில் அந்நாட்டு கடேலார காவல்படை சார்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Published:Updated:
இலங்கை அகதிகள்

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அரிசி, பருப்பு, காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விலை வானளவு உயர்ந்து, மக்கள் வாழ வழியின்றி ஒரு வேளை உணவுக்குக் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில் ஆளும் அரசுக்கு எதிராக இலங்கை வாழ் மக்கள் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்ததைத் தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் ராஜினாமா செய்தார். இதையடுத்து இலங்கையில் புதிய பிரதமர் பதவியேற்று அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. பொருளாதார நெருக்கடியைச் சீர்செய்ய புதிய அமைச்சரவை போராடிவருகிறது.

இலங்கையில் பசி பட்டினியுடன், வாழ வழியின்றி ஏற்கெனவே 22 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேர் கடல்வழியாக ராமேஸ்வரத்துக்குள் அகதிகளாக நுழைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மண்டபம் அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் இலங்கை மக்கள் தமிழ்நாட்டுக்குள் அகதிகளாக நுழைவதைத் தடுக்க அந்நாட்டு கடலோர காவல் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுவந்தனர்‌. இதனால் கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டுக்குள் இலங்கை அகதிகள் நுழைவது குறைந்திருந்தது.

மண்டபம் காவல் நிலையம்
மண்டபம் காவல் நிலையம்

இந்த நிலையில் ராமேஸ்வரத்தை அடுத்த கோதண்டராமர் கோயிலில் இலங்கையைச் சேர்ந்த மூன்று பேர் தஞ்சம் புகுந்துள்ளதாக மரைன் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் மூன்று பேரையும் மண்டபம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் இலங்கை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் சஞ்சய், அவரின் மனைவி ஜெசிந்தன் மேரி, மகன் அனிஸ்டன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் நள்ளிரவில் இலங்கையிலிருந்து கள்ளப் படகு மூலம் தனுஷ்கோடி கடற்கரைக்கு வந்துள்ளனர். அங்கிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோதண்டராமர் கோயிலுக்கு நடந்து வந்துள்ளனர்‌.

இலங்கையில் உணவின்றி, பசி பட்டினியுடன் கிடந்ததாகவும், உயிர் வாழ வேறு வழியின்றி நகைகள், சொத்துகளை விற்று ஒரு லட்சம் கொடுத்து கள்ளப் படகு மூலம் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளதாகவு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மரைன் போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism