மீன்பிடிக்கச் சென்ற பாம்பன் பகுதி மீனவர்கள்மீது இலங்கை ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம், ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பனிலிருந்து 300 விசைப்படகுகளில் 1,000-க்கும் அதிகமான மீனவர்கள் நேற்று கடலுக்குச் சென்றனர். இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு திடீரென வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள்மீது பாட்டில்களையும் கற்களையும் வீசி விரட்டியுள்னர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதைத் தொடர்ந்து அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்த படகுகள் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தியதால், திடீர்த் தாக்குதலை எதிர்பாராத மீனாவர்கள் பதறியபடி அங்கிருந்து கிளம்பியுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் பாம்பன் மீனவர்களின் படகுகளில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளன. துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகாமல் ஒன்பது மீனவர்கள் தப்பியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

தங்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதல், துப்பாக்கிச்சூடு பற்றி காவல்துறை, மீன்துறை அதிகாரிகளிடம் தப்பித்துவந்த மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், படகிலிருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கரை திரும்பிய மீனவர்கள், ''மீன்பிடித் தடை காலம் முடிந்து இப்போதுதான் கடலுக்குச் செல்கிறோம். கொரோனா ஊரடங்கு ஒரு பக்கம் எங்களை வாட்டி எடுக்க, டீசல் விலை உயர்வு இன்னொரு பக்கம் நெருக்க பல கஷ்டங்களுக்கிடையே கடலுக்குச் செல்லும் நேரத்தில் இலங்கை கடற்படை இப்படி அட்டூழியம் செய்துள்ளது. நம் நாட்டு எல்லைக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது தாக்குதலை இலங்கை கடற்படை நடத்தியுள்ளது.

நாட்டுக்கு பல கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரக்கூடிய எங்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து கேள்விக்குறியாகிவருகிறது. நாங்கள் நிம்மதியாகத் தொழில் செய்ய மத்திய மாநில அரசுகள் பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என்றனர். மீனவர்களின் குற்றச்சாட்டுக்கு இலங்கை அரசு எந்த பதிலையும் இதுவரை தெரிவிக்கவில்லை.