Published:Updated:

``நடனத்துக்குச் சம்பந்தமில்லாத வெளிமாநில பெண்கள்; கலாசார சீரழிவு!'- கொந்தளிக்கும் மேடைக் கலைஞர்கள்

திரைப்பட மேடை நடனக் கலைஞர்கள்
திரைப்பட மேடை நடனக் கலைஞர்கள்

`கோயில் திருவிழாக்களில், ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தும் தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று திரைப்பட மேடை நடனக் கலைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு திரைப்பட மேடை நடனக் கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், ``வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முறையான நடனக் கலைஞர்கள் இருக்கிறோம்.

வேலூர் எஸ்.பி அலுவலகம்
வேலூர் எஸ்.பி அலுவலகம்

கடந்த 30 ஆண்டுகளாகக் கோயில் திருவிழாக்களின்போது ஆபாசம் இல்லாமல் நடன நிகழ்ச்சிகளை நடத்திவருகிறோம். எங்களின் வாழ்வாதார தொழிலும் இதுதான்.

நடனத்தைத் தவிர வேறு எந்தத் தொழிலும் தெரியாது. 6 மாத திருவிழா காலங்களில் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டுதான் மீதமுள்ள 6 மாதங்களில் குடும்பம் நடத்துகிறோம்.

புகார் மனு
புகார் மனு

இப்படியான சூழ்நிலையில், இடைத்தரகர்கள் நடனத்துக்குச் சம்பந்தமில்லாத வெளிமாநிலப் பெண்களை அழைத்துவந்து அரைகுறையான ஆடைகளை அணியச் செய்து ஆபாச நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

கலாசாரத்தை சீரழிக்கும் ஆபாச நடன நிகழ்ச்சிக்கு நாங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். எங்களின் நலச்சங்கம் தரப்பில் பலமுறை அறிவுரை கூறினோம். அவர்கள் கேட்பதாக இல்லை.

திரைப்பட மேடை நடனக் கலைஞர்கள்
திரைப்பட மேடை நடனக் கலைஞர்கள்

ஆபாச நடன நிகழ்ச்சியை நடத்திவரும் தரகர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து இந்த மாவட்டத்தைச் சார்ந்த இரண்டாயிரம் கலைஞர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்த வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு