Published:Updated:

நன்றி தெரிவிக்க நேரில் சந்திக்க ஆசைப்பட்ட மாணவி; இன்ப அதிர்ச்சி அளித்த ஸ்டாலின்!

முதலமைச்சர் ஸ்டாலின் மாணவி, ஷோபனாவின் கடிதத்தை மனதில் வைத்திருந்து, அவரை குடும்பத்தினருடன் அழைத்து வரும்படி அதிகாரிகளிடம் தெரிவிக்க, உடனே களத்தில் இறங்கினார்கள் அதிகாரிகள்.

தன் உயர்கல்விக்கு உதவி செய்த முதலமைச்சருக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்க விரும்பிய மாணவியை, மதுரை வந்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தது மாணவியின் குடும்பத்தினரை நெகிழ வைத்துள்ளது.

மதுரை மாவட்டம், திருவேடகம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஷோபனா, 12-ம் வகுப்பு தேர்வாகியுள்ள தான் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு பண வசதியில்லாமல் இருப்பதாக 2 மாதங்களுக்கு முன் தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கடிதம் எழுதினார்.

மாணவி குடும்பத்தினருடன்
மாணவி குடும்பத்தினருடன்
கோழி இறகு, மீன் செதில் மூலம் மாசுக்கட்டுப்பாடு; ஜனாதிபதி கையால் விருது பெறும் ஆந்திர மாணவி!

மாணவி ஷோபனாவின் கடிதத்தை பரிசீலித்த முதலமைச்சர், மதுரையிலுள்ள மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் பி.பி.ஏ-வில் சேர்ந்து பயில்வதற்கு அவருக்கு உதவி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்..

``இந்த உதவிக்காக நன்றி தெரிவிக்க நேரில் தங்களை சந்திக்க விருப்பமிருந்தும், போக்குவரத்து செலவுக்கான பணம் இல்லாததால் வர இயலவில்லை" என்று மீண்டும் முதலமைச்சருக்குக் கடிதம் எழுதினார் மாணவி. இதற்கு எந்த பதிலும் வரவில்லை.

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேற்று மதுரைக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின் மாணவி, ஷோபனாவின் கடிதத்தை மனதில் வைத்திருந்து, அவரை குடும்பத்தினருடன் அழைத்து வரும்படி அதிகாரிகளிடம் தெரிவிக்க, உடனே களத்தில் இறங்கினார்கள் அதிகாரிகள்.

மாணவியுடன் முதலமைச்சர்
மாணவியுடன் முதலமைச்சர்
நண்பனுக்காக 20 வருடங்கள் 10 ரூபாய் நோட்டை பாதுகாத்த ராணுவ வீரர்; நெகிழ்ச்சி சம்பவம்!

அரசு வாகனத்தை திருவேடகம் கிராமத்திற்கு அனுப்பி கல்லூரி மாணவி ஷோபனாவையும், அவரின் பெற்றோரையும் முதலமைச்சர் தங்கியிருந்த மதுரை அரசு விருந்தினர் மாளிகைக்கு அழைத்து வந்தனர்.

குடும்பத்தினரோடு வந்த ஷோபனாவிடம் நலம் விசாரித்த முதல்வர், படிப்பிற்கான புத்தகங்கள், புத்தகைப்பை, கல்வி உபகரணங்களுடன் நிதியுதவி வழங்கி வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

தான் அனுப்பிய கடிதத்தை நினைவு வைத்து தன்னையும் குடும்பத்தினரையும் முதலமைச்சர் அழைத்துப் பேசுவார் என்று கனவிலும் நினைல்கவில்லை என்று கூறிய ஷோபனா, இன்னும் ஆச்சர்யத்திலிருந்து விடுபடமுடியாமல் உள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு