Published:Updated:

தஞ்சை விபத்து: ``முதல்வரய்யா என் ஒத்தப் புள்ளையப் பறிக்கொடுத்துட்டேன்”- கதறிய தாய்; தேற்றிய ஸ்டாலின்

உயிரிழந்தவருக்கு மலர் வளையம் அஞ்சலி செலுத்திய ஸ்டாலின் ( ம.அரவிந்த் )

முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம், ``இச்சம்பவம் தாங்க முடியாத துயரத்தை அளித்துள்ளது. அதைச் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. இச்செய்தியைக் கேள்விப்பட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்” என்றார்.

தஞ்சை விபத்து: ``முதல்வரய்யா என் ஒத்தப் புள்ளையப் பறிக்கொடுத்துட்டேன்”- கதறிய தாய்; தேற்றிய ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம், ``இச்சம்பவம் தாங்க முடியாத துயரத்தை அளித்துள்ளது. அதைச் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. இச்செய்தியைக் கேள்விப்பட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்” என்றார்.

Published:Updated:
உயிரிழந்தவருக்கு மலர் வளையம் அஞ்சலி செலுத்திய ஸ்டாலின் ( ம.அரவிந்த் )

தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். முதலமைச்சர் ஸ்டாலின் களிமேடு கிராமத்துக்கு நேரில் சென்றதுடன், உயிரிழந்த ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்று அவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறியதுடன், `இந்தத் துயரத்தைச் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை’ எனக் கண்கலங்கினார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் அமைந்துள்ள திருநாவுக்கரசர் கோயிலில் 94-வது குருபூஜை விழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் அதிகாலை 3 மணி அளவில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது தேரின் மேல் பகுதி அவ்வழியே சென்ற உயர் மின்அழுத்தக் கம்பியில் உரசியதில் மின் விபத்து ஏற்பட்டது. இதில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெரும் துயரத்தை ஏற்படுத்திய தேர் விபத்து தமிழகம் முழுவதையும் உலுக்கியது. இதைத் தொடர்ந்து சட்டசபையில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியதுடன் ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பின்னர் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தவர், சாலை வழியாக திருச்சிக்குச் சென்று, பின் தஞ்சாவூர் களிமேடு கிராமத்துக்கு மாலை 4 மணிக்குச் சென்றார்.

தேர் விபத்து
தேர் விபத்து

தஞ்சாவூர் கிளம்பியதுமே அதிகாரிகளிடம், `உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு வீட்டுக்கும் நேரில் சென்று ஆறுதல் கூற வேண்டும். மகிழ்ச்சியாகத் தொடங்கிய கோயில் விழா பலரையும் கலங்கவைத்துவிட்டது. வீட்டில் ஒருவரை இழந்துவிட்டுத் தவிக்கும் குடும்பத்துக்கு நேரில் சென்று அவர்களது துயரத்தில் பங்கெடுக்க வேண்டும். அதற்கான ஏற்பாட்டைச் செய்யுங்க’ எனச் சொல்லிவிட்டே கிளம்பியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்படி களிமேடு கிராமத்தில் உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது மகனை இழந்த தாய் ஒருவர், ``முதல்வரய்யா, என் ஒத்தப் புள்ளையப் பறிக்கொடுத்துட்டேனே’ எனப் பெரும் குரலெடுத்துக் கதறினார். கண்கலங்கிய நிலையில் அந்தத் தாயை ஸ்டாலின் தேற்றி ஆறுதல் கூறினார்.

தேரைப் பார்வையிடும் முதல்வர் ஸ்டாலின்
தேரைப் பார்வையிடும் முதல்வர் ஸ்டாலின்

இதையடுத்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு சட்டசபையில் அறிவித்தபடி ரூ.5 லட்சத்துக்கான நிவாரண உதவித்தொகையை வழங்கினார். மேலும் தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சத்தையும் வழங்கினார். அதன் பின்னர் சம்பவ இடத்துக்குச் சென்று தீ விபத்தில் எரிந்து சேதமடைந்த தேரைப் பார்வையிட்டதுடன், சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து, `உயர்தர சிகிச்சை கொடுக்க உத்தரவிட்டிருக்கேன். கவலைப்படாம இருங்க” என ஆறுதல் கூறினார்.

பின்னர் அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000, தி.மு.க சார்பில் ரூ.25,000 நிவாரண உதவியை வழங்கினார். தொடர்ந்து ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ``இச்சம்பவம் தாங்க முடியாத துயரத்தை அளித்துள்ளது. அதைச் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. இச்செய்தியைக் கேள்விப்பட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், அதிகாரிகள், அரசு அலுவலர்கள் என அனைவருக்கும் உத்தரவிடப்பட்டது.

இறந்தவர்களின் உடல்கள்
இறந்தவர்களின் உடல்கள்

தொடர்ந்து, சட்டசபையில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து அரசு சார்பில் ஆறுதல் கூறினேன். தஞ்சாவூர் மண்ணின் மைந்தன் என்கிற முறையில் நான், அவர்களின் துயரத்தில் பங்கெடுத்துள்ளேன்.

இந்த விபத்து குறித்த சரியான காரணத்தை அறிய வேண்டும் என்பதற்காகவும், வருங்காலத்தில் இது போன்ற விபத்துகள் நடக்காமல் இருக்கவும் என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றன என்பதை ஆய்வு செய்து அறிக்கை வழங்குவதற்காக, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

சோகத்தில் குடும்பத்தினர்
சோகத்தில் குடும்பத்தினர்

இச்சூழலை அரசியலாக்க வேண்டும் எனச் சிலர் நினைக்கின்றனர். அதற்கு பதில் சொல்ல நான் விரும்பவில்லை. இதில் அரசியல் பார்க்கக் கூடாது என்பதுதான் என்னுடையே எண்ணம். போற்றுவார், தூற்றுவார் பற்றி நான் கவலைப்படுவது கிடையாது. மக்களுக்குத் துயரம் ஏற்படாமல் காக்கவும், அதையும் மீறி இது போன்ற துயரங்கள் ஏற்படும்போது மக்களோடு இருக்க வேண்டும் என்பதுதான் அரசின் இலக்கு. அதை நோக்கியே பயணிப்போம். விசாரணைக்குப் பிறகு முழுமையான தகவல் அளிக்கப்படும். விபத்து குறித்து அறநிலையத்துறை, மின்துறை அமைச்சர்கள் ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism