Published:Updated:

`கலவை சாதம் வேண்டாம்; இட்லிதான் வேண்டும்!’-அடம்பிடித்த ஸ்டான்லி அரசு மருத்துவமனை கொரோனா நோயாளிகள்?

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் ஸ்டான்லி அரசு மருத்துவமனை
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் ஸ்டான்லி அரசு மருத்துவமனை

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா உறுதிசெய்யப்பட்ட நோயாளிகள், இரவு உணவு தொடர்பாக ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை டாக்டர்களும் போலீஸாரும் சமரசப்படுத்தினர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சொற்ப எண்ணிக்கையில்தான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுழற்சி முறையில் மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வார்டு
கொரோனா வார்டு

கொரோனா உறுதிசெய்யப்பட்ளிகள் இரவு உணவு தொடர்பாக ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை வார்டிலிருந்த மருத்துவர்கள், நர்ஸ்கள் சமரசம் செய்தும் அவர்கள் சமரசமடையவில்லை. இதையடுத்து, மருத்துவமனை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு, எங்களுக்கு கலவை சாதம் வேண்டாம், இட்லி வேண்டும் என்று கூறினர். அப்போது, நேரமாகிவிட்டதால் இனிமேல் இட்லி தயாரிக்க வாய்ப்பில்லை. அதனால் இந்த கலவைச் சாதத்தை சாப்பிடுங்கள். நாளை நீங்கள் கேட்ட இட்லியைத் தருகிறோம் என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது. இதற்கிடையில் காவல்துறையினரும் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து, கலவை சாதம் திரும்ப கொண்டுசெல்லப்பட்டு டிபனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதைச் சாப்பிட்ட பிறகே நோயாளிகள் அமைதியாகினர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் இடநெருக்கடி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால்தான் வேறு இடத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்காக, அருகில் உள்ள கல்லூரி ஒன்று தேர்வு செய்யப்பட்டது.

கொரோனா வார்டில் பணியாற்றுபவர்களுக்கு 15 நாள்கள் பணி வழங்கப்படுகிறது. அதில் 7 நாள்கள் வார்டிலும் அடுத்த 7 நாள்கள் தங்களைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டுக்குகூட செல்லாமல் மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர்கள் மருத்துவமனைகளிலேயே தங்கியிருக்கின்றனர்.
ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஊழியர்கள்
கொரோனா வார்டு
கொரோனா வார்டு
`கொரோனா தொற்றால் இறந்த தொழிலதிபர்' - கீழக்கரைக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்டான்லி மருத்துவமனை அதிகாரி

ஆனால், சில காரணங்களுக்காக அந்தக் கல்லூரியில் வார்டு அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது கொரோனா வார்டில் பிரச்னை ஏற்பட்டதால், கல்லூரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களை மாற்ற மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருகிறது. இதையொட்டி, கல்லூரியில் வார்டு அமைய உள்ள இடத்தை மருத்துவமனை உயரதிகாரிகள் இன்று பார்வையிட்டனர். அதனால் இன்னும் சில தினங்களில் நோயாளிகள் கல்லூரியில் உள்ள சிறப்பு வார்டுக்கு மாற்றப்படவுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஸ்டான்லி மருத்துவமனை ஊழியர்கள் கூறுகையில், இந்த மருத்துவமனையில் கொரோனா வார்டில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுவருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ராமநாதபுரம், கீழக்கரையைச் சேர்ந்த தொழிலதிபரின் சடலத்தை சொந்த ஊருக்குக் கொண்டுசெல்ல அனுமதித்ததில் ஸ்டான்லி மருத்துவமனை ஆர்.எம்.ஓ சர்ச்சையில் சிக்கினார். கொரோனா சிறப்பு வார்டு அமைந்துள்ள கட்டடத்தில் முதல் மாடியில் ஒரு பிரிவினரும் 2-வது மாடியில் இன்னொரு பிரிவினரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனை
ஸ்டான்லி அரசு மருத்துவமனை
`எப்படி இறந்தார் சென்னைப் பயிற்சி டாக்டர் பிரதீபா?' - பிரேதப் பரிசோதனைக்குப் பின்னும் மர்மம்

இன்றைய சூழலில், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவமனை பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், சேவை மனப்பான்மையில் பணியாற்றி வருகின்றனர். தனிமனித கவச உடையை அணிந்துகொண்டு 10 மணி நேரம் பணியாற்ற வேண்டியதுள்ளது. அதனால் பல்வேறு சிரமங்களைச் சந்தித்துவரும் ஊழியர்களை கொரோனா வார்டில் சிகிச்சை பெறும் சில நோயாளிகள் புரிந்துகொள்வதில்லை. வார்டிலிருந்து வெளியில் செல்வதால், அடுத்தடுத்து நோய் பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதுகுறித்து விளக்கினாலும் எங்களுக்கு இட்லிதான் வேண்டும் என அடம்பிடிக்கின்றனர்.

எனவே, நோயாளிகளும் சூழ்நிலையைப் புரிந்து நடந்து கொள்வதோடு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கொரோனா வார்டில் பணியாற்றுபவர்களுக்கு 15 நாள்கள் பணி வழங்கப்படுகிறது. அதில் 7 நாள்கள் வார்டிலும் அடுத்த 7 நாள்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டுக்குக்கூட செல்லாமல் மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர்கள் மருத்துவமனைகளிலேயே தங்கியிருக்கின்றனர்'' என்றனர்.

ஸ்டான்லி  மருத்துவமனை
ஸ்டான்லி மருத்துவமனை

கொரோனா நோயாளிகள் தரப்பில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு போதிய உணவு, தண்ணீர் வழங்கப்படுவதில்லை. அதைக் கேட்டுதான் நாங்கள் நேற்றிரவு போராடினோம். ஆனால், மருத்துவமனையில் உள்ள சிலர் போராட்டத்தை திசை திருப்பிவிட்டனர். நாங்கள் கலவை சாதம் வேண்டாம் என்றும் இட்லிதான் வேண்டும் என்று அடம் பிடித்ததுபோல தகவல்களைச் சொல்லிவருகின்றனர். ஏற்கெனவே இடநெருக்கடி அதிகமாக உள்ள நிலையில் மாற்று ஏற்பாட்டைக்கூட மருத்துவமனை தரப்பில் செய்துகொடுக்க முன்வரவில்லை. அதனால்தான் நாங்கள் போராடினோம் என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு