கோவை மாவட்டம் திருலையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். சமூக ஆர்வலரான இவர், சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டே தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பல்வேறு ஊழல்களை வெளிகொண்டு வந்தார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பாக,

திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில தகவல்களை கேட்டிருந்தார். அப்போது பேரூராட்சியில் இருந்த மணிகண்டன் என்கிற ஊழியர் ரமேஷை மிரட்டியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதுகுறித்து ரமேஷ் அப்போதே மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோரிடம் புகார் தெரிவித்திருந்தார். இதனிடையே அப்போது மதுக்கரை காவல்நிலைய இன்ஸ்பெக்டர்களாக இருந்த தூயமணி வெள்ளைச்சாமி, மணிவண்ணன், எஸ்.ஐ ஆனந்தகுமார் ஆகிய 3 போலீஸ்காரர்கள் ஒருநாள் நள்ளிரவு ரமேஷ் வீட்டுக்கு சென்று, தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பி அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அடுத்த நாள் டி.எஸ்.பியை சந்திக்க வருமாறும் போலீஸார் கூறினர். அதனடிப்படையில் ரமேஷ் அங்கு சென்றுள்ளார். ஆனால், டி.எஸ்.பி இல்லை. இதையடுத்து, தனக்கு நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக, ரமேஷ் மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதை விசாரித்து வந்த மனித உரிமைகள் ஆணையம், பாதிக்கப்பட்ட ரமேஷ்க்கு சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் ரூ.1 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதைத் தூயமணி வெள்ளைச்சாமி (ரூ.25,000), மணிவண்ணன் (ரூ.25,000), ஆனந்தகுமார் (ரூ.50,000) ஆகிய காவலர்கள் இணைந்து கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்த உத்தரவு சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.