Published:Updated:

ரூ.5 லட்சம் அபராதம்! - ஆரணி அருகே நெற்பயிர்களை டிராக்டரால் உழுத டி.எஸ்.பி மீது ஒழுங்கு நடவடிக்கை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சேதப்படுத்தப்பட்ட நெற்பயிர்
சேதப்படுத்தப்பட்ட நெற்பயிர் ( கா.முரளி )

2017 டிசம்பர் 26-ம் தேதி அன்று ஆரணி காவல் துறையிலிருந்த டி.எஸ்.பி ஜெரினா பேகம் முன்னிலையில், பச்சைப் பசேலென்று வளர்ந்து நின்ற நெற்பயிரை டிராக்டர் விட்டு உழுத சம்பவத்தை, தமிழக விவசாயிகள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த காமக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரின் அண்ணன் அண்ணாமலை. இவர்களுக்கு அதே பகுதியில் 16 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில், அண்ணாமலைக்குத் தெரியாமல் தியாகராஜன் நிலத்தின் பட்டா மற்றும் பத்திரங்களைத் தன்னுடைய மகள் சாமுண்டீஸ்வரியின் பெயருக்கு மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தனக்கு இந்த நிலத்தில் பங்கு இருக்கிறது என்று அண்ணாமலையின் மகள் சாவித்திரி, அந்த நிலத்தில் பயிரிட்டு வந்துள்ளார். இது தொடர்பாக சாமுண்டீஸ்வரிக்கும் சாவித்திரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படவே இருவரும் ஆரணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே மீண்டும் தகராறு ஏற்பட, ஆரணி டி.எஸ்.பி-யாக இருந்த ரெஜினா பேகத்திடம் புகார் செய்தார் சாமுண்டீஸ்வரி.

மனித உரிமைகள் ஆணையம் ஆய்வு செய்தது
மனித உரிமைகள் ஆணையம் ஆய்வு செய்தது

இதை முழுமையாக விசாரணை செய்யாமல் ஒருதலைபட்சமாகச் செயல்பட்ட டி.எஸ்.பி ஜெரினா பேகம், சாவித்திரி பயிரிட்டிருந்த நெல் வயலில் டிராக்டரை விட்டு உழுவதற்கு உத்தரவிடவே, அந்த வயல் உழப்பட்டது. இந்தச் சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த வீடியோவில், `நெல் வயலை அழிக்க வேண்டாம்...’ என்று கதறியபடி டிராக்டருக்கு நடுவே சாவித்திரி விழும் காட்சி மனதை உருக்கியது. அந்த வீடியோவில் டி.எஸ்.பி ஜெரினா பேகம், சாவித்திரியைப் பார்த்து 'உன் கையை ஒடித்துவிடுவேன்’ என மிரட்டும் காட்சியும் இடம் பெற்றிருந்தது.

இதுதொடர்பாக, சேதப்படுத்தப்பட்ட நெல் வயலைப் பார்வையிட்ட மனித உரிமைகள் ஆணையக் குழு, தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, டி.எஸ்.பி ஜெரினா பேகம் எடுத்த நடவடிக்கை மனித உரிமைகளுக்கு எதிரானது.

சேதப்படுத்தப்பட்ட நெற்பயிர்
சேதப்படுத்தப்பட்ட நெற்பயிர்
கா.முரளி

இது முற்றிலும் கண்டிக்கத்தக்க செயல். உறவினர்களுக்குள் இருக்கும் பிரச்னைக்காக, நெல் வயலை உழுதது ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தச் சம்பவத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து ஆரணி டி.எஸ்.பி ஜெரினா பேகம் ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று கடந்த 2018 பிப்ரவரி 27-ம் தேதி சம்மன் அனுப்பியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Vikatan

இந்த வழக்கு தொடர்பான கடைசிகட்ட விசாரணை 2019 அக்டோபர் 1-ம் தேதி அன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் முடிந்தது. இந்தநிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய மனித உரிமைகள் ஆணையம், டி.எஸ்.பி செய்தது மனித உரிமை மீறல். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிக்குத் தமிழக அரசு ரூ 5 லட்சம் வழங்க வேண்டும். மேலும், டி.எஸ்.பி ஜெரினா பேகம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் விவசாயி சாவித்திரி மரணம் அடைந்த நிலையில் ரூ.5 லட்சத்தை அவருடைய கணவர் மற்றும் பிள்ளைகளுக்குப் போய்ச் சேர வேண்டும் எனக் கூறியுள்ளது

டி.எஸ்.பி ஜெரினா பேகம்
டி.எஸ்.பி ஜெரினா பேகம்

இதுகுறித்து சாவித்திரியின் கணவர் கிருஷ்ணனிடம் பேசினோம். ``இது உண்மைக்குக் கிடைத்த நீதி. அந்த டி.எஸ்.பி மேடம், என்னையும் என் மனைவி சாவித்திரியையும் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு எங்களைத் துன்புறுத்திட்டாங்க. காதிலேயே வாங்க முடியாத அளவுக்குக் கெட்ட வார்த்தையா பேசினாங்க. ஸ்டேஷன் படியே ஏறாத என் மனைவியை ஸ்டேஷனுக்கு வரவச்சு கடுமையான வார்த்தையில திட்டி ரொம்ப அவமானப்படுத்திட்டாங்க. அந்த மன வேதனையிலேயே அவ கொஞ்ச நாளிலேயே இறந்து போய்ட்டா. என் மனைவி உயிரை அந்த டி.எஸ்.பி மேடம் தருவார்களா?' என்று கண்ணீர்விட்டு அழுதார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு