Published:Updated:

திண்டுக்கல்: கிராமப்புற மேம்பாட்டிற்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி; 500 இளைஞர்கள் பங்கேற்பு

மாரத்தான்
News
மாரத்தான்

கிராமங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பது, திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்பது, போதைப் பொருள்கள் பயன்பாட்டை தவிர்த்தல், உள்ளிட்டவைகளை விளக்கும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

திண்டுக்கல்: கிராமப்புற மேம்பாட்டிற்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி; 500 இளைஞர்கள் பங்கேற்பு

கிராமங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பது, திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்பது, போதைப் பொருள்கள் பயன்பாட்டை தவிர்த்தல், உள்ளிட்டவைகளை விளக்கும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

Published:Updated:
மாரத்தான்
News
மாரத்தான்
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே கொத்தப்புள்ளி ஊராட்சி சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கிராமப்புற மக்களின் அனைத்து மேம்பாட்டிற்கான விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கொத்தப்புள்ளி, அனுமந்தராயன்கோட்டை, கரிசல்பட்டி, தருமத்துப்பட்டி, கே.புதுக்கோட்டை, பொம்மணக்கோட்டை, தாதன்கோட்டை, பொன்னிமான்துறை, கதிரணம்பட்டி உள்ளிட்ட 24 பஞ்சாயத்துகளைச் சேர்ந்த 500 இளைஞர்கள் மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர். தோப்புப்பட்டியில் தொடங்கிய போட்டி 6 கிலோ மீட்டர் இடையே உள்ள கிராமங்களைக் கடந்து கதிரணம்பட்டியில் முடிந்தது. 

போட்டி தொடக்கம்
போட்டி தொடக்கம்

ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி முருகேசன் போட்டியைத் தொடங்கி வைத்தார். இப்போட்டியை முன்னிட்டு கிராமங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பது, திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்பது, கழிவுகள் தேங்குவதை தவிர்த்தல், போதைப் பொருள்கள் பயன்பாட்டை தவிர்த்தல், வீடுதோறும் மரங்கள் வளர்த்தல், மக்கும் குப்பையை சேகரித்து உரமாக்குதல் உள்ளிட்டவைகளை விளக்கும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. 

விழாவை முன்னிட்டு தேவராட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன. முதல் இடத்தைப் பிடித்த கரிசல்பட்டியைச் சேர்ந்த லியாண்டருக்கு 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் இடத்தைப் பிடித்த அனுமந்தன்ராயன்கோட்டையைச் சேர்ந்த அருணுக்கு 7 ஆயிரம் ரூபாய், மூன்றாம் இடத்தைப் பிடித்த சூசைபட்டியைச் சேர்ந்த மில்லர் பன்னீர்செல்வத்துக்கு 5 ஆயிரம் ரூபாய், நான்காம் இடத்தைப் பிடித்த கே.புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜார்ச்சுக்கு 3 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 

பரிசளிப்பு
பரிசளிப்பு

பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கொத்தப்புள்ளி ஊராட்சியில் பல்துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கினார். அதில் கதிரணம்பட்டியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி உள்பட 10 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கொத்தப்புள்ளி ஊராட்சி தலைவர் சுந்தரி அன்பரசு செய்திருந்தார். 

விழாவில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, "நான் பள்ளி, கல்லூரி காலங்களில் மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரராக இருந்தேன். நீதிபதியாக ஆக வேண்டும் என விரும்பிய எனக்கு காவல் சார்பு- ஆய்வாளர் வேலை தேடி வந்தது. அதை நான் ஏற்காமல் அரசியலுக்கு வந்துவிட்டேன். ஆனால் வென்றதாக நினைப்பது என்னவோ விவசாயத்தில் தான். அந்த வகையில் இளைஞர்கள் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தினால் அனைத்திலும் சாதிக்க முடியும்.

இளைஞர்கள்
இளைஞர்கள்

பொதுவாக மாரத்தான் போட்டிகள் நகரப்பகுதிகளில் தான் நடத்தப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகையையொட்டி கிராமப் பகுதிகளில் கபடி போட்டிகள் நடத்தப்படும். ஆனால் கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டிருப்பது பாராட்டக்கூடியது" என்றார்.