Published:Updated:

``ரெண்டு வாரம் முன்னதான் லீவுக்கு வந்துட்டுப் போனார்" - ராணுவ வீரர் லட்சுமணனின் உறவினர்கள் கண்ணீர்

வீர மரணமடைந்த லட்சுமணன்

``ரொம்ப துறுதுறுன்னு லட்சுமணன் இருப்பார். சின்ன வயசுல இருந்தே ராணுவத்தில் சேர வேண்டுமென்பது அவரின் ஆசை. அதன்படியே பயிற்சி எடுத்து தயாராகிச் சேர்ந்தார்.” - ஊர் மக்கள்

``ரெண்டு வாரம் முன்னதான் லீவுக்கு வந்துட்டுப் போனார்" - ராணுவ வீரர் லட்சுமணனின் உறவினர்கள் கண்ணீர்

``ரொம்ப துறுதுறுன்னு லட்சுமணன் இருப்பார். சின்ன வயசுல இருந்தே ராணுவத்தில் சேர வேண்டுமென்பது அவரின் ஆசை. அதன்படியே பயிற்சி எடுத்து தயாராகிச் சேர்ந்தார்.” - ஊர் மக்கள்

Published:Updated:
வீர மரணமடைந்த லட்சுமணன்

காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் மதுரையைச் சேர்ந்த தமிழ்நாட்டு வீரர் லட்சுமணன் வீர மரணமடைந்த சம்பவம் மதுரை மாவட்ட மக்களை அதிர்ச்சியடைய வைத்த்திருக்கிறது. இந்த வீரமரணச் செய்தி கேட்டு திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியிருக்கிறது.

வீரர் லட்சுமணன்
வீரர் லட்சுமணன்

காஷ்மீரில் ரஜோரி அருகே அமைந்துள்ள ராணுவ முகாம் மீது நேற்று அதிகாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நமது ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தியதில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதில் ராணுவ வீரர்கள் மூன்று பேர் வீர மரணமடைந்தார்கள். அதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான லட்சுமணனும் ஒருவர்.

வீரர் லட்சுமணின் பெற்றோர்
வீரர் லட்சுமணின் பெற்றோர்

இந்தத் தகவல் தெரிந்து மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள டி.புதுப்பட்டி கிராமமே சோகமயமாகியிருக்கிறது. பல ஊரைச் சேர்ந்த மக்களும் இரங்கல் தெரிவிக்க நேற்று முதல் அங்கு சென்றுகொண்டிருக்கிறார்கள்.

டி.புதுப்பட்டியைச் சேர்ந்த தர்மராஜ் - ஆண்டாள் தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததால் ராமர், லட்சுமணன் என்று பெயர் வைத்தார்கள். அந்த வட்டாரத்தில் ராணுவ வேலைக்குச் செல்வது பலருக்கும் லட்சியமாக இருந்ததால், இரண்டு பேருமே ராணுவப் பணி தேர்வுக்குச் சென்றனர். அதில் இளைய மகன் லட்சுமணனுக்கு வேலை கிடைத்தது. ராமர் தொடர்ந்து ராணுவப் பணிக்கு முயன்றுவருகிறார். லட்சுமணன் மூன்று வருடங்களுக்கு முன்பு ராணுவப் பணியில் சேர்ந்து பணியாற்றிவந்த நிலையில்தான் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்திருக்கிறது.

வீரர் லட்சுமணின்  சகோதரர்
வீரர் லட்சுமணின் சகோதரர்

இது குறித்து நம்மிடம் பேசிய ஊர்க்காரர்கள், ``ரொம்ப துறுதுறுன்னு லட்சுமணன் இருப்பார். சின்ன வயசுல இருந்தே ராணுவத்தில் சேர வேண்டுமென்பது அவரின் ஆசை. அதன்படியே பயிற்சி எடுத்து தயாராகிச் சேர்ந்தார். ரெண்டு மாத லீவில் ஊருக்கு வந்து இருந்துவிட்டு ரெண்டு வராத்துக்கு முன்னாடிதான் காஷ்மீருக்குச் சென்றார். ஊரிலுள்ள பசங்களிடம் ராணுவ வேலையில் எப்படிச் சேருவது, அதனால் என்ன மாதிரியான நன்மை என்பது குறித்துப் பேசினார். தினமும் இரவு வீட்டுக்கு போன் போட்டு அப்பா, அம்மாவிடம் பேசிவிடுவார். இப்படி ஆகும்னு எதிர்பார்க்கலை" என்றனர்.

வீரமரணமடைந்த லட்சுமணின் உடலை ஊருக்குக் கொண்டு வர ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. தமிழக அரசு 20 லட்ச ரூபாய் நிதி அறிவித்த்ருக்கிறது. லட்சுமணின் அண்ணன் ராமரும் ராணுவத்தில் சேரத் தயாராகிவருகிறார். ஆனாலும், லட்சுமணின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவர் பெற்றோர் கதறிக்கொண்டிருக்கிறார்கள்.