Published:Updated:

பட்டுக்கோட்டை: இரண்டு நாள்களில் 57 பேரைக் கடித்த வெறி நாய் - போராடிப் பிடித்த நகராட்சி ஊழியர்கள்!

வெறி நாய் கடித்ததில் காயமடைந்தவர்கள்
News
வெறி நாய் கடித்ததில் காயமடைந்தவர்கள்

நாய் பிடிபடும் வரை மக்கள் யாரும் தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என்றும் சிலர் சமூக வலைதளங்களில் எச்சரிக்கை செய்தனர்.

பட்டுக்கோட்டை நகரத்தின் மணிக்கூண்டு, அறந்தாங்கி, முக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் நின்று கொண்டிருப்பவர்கள், டூ வீலரில் செல்பவர்கள் எனப் பலரையும் கடந்த சில தினங்களாகத் தெரு நாய் ஒன்று கடித்து வந்தது. இதனால் மக்கள் சாலையில் செல்லவே அச்சப்படுகிற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில்
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில்

பயங்கர சத்தத்துடன் குரைத்துக் கொண்டே ஓடி வந்து கால் மற்றும் தொடைப் பகுதிகளில் கடித்து விட்டு ஓடி விடும் அந்த நாயால், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஊசி போட்டுக்கொள்ளச் சென்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதையடுத்து, அந்த நாய் குறித்து நகராட்சியில் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதற்கிடையில், பொதுமக்களைக் கடித்து வரும் தெரு நாய்க்கு வெறி பிடித்திருக்கிறது. அதனால் தான் இப்படி நடந்து கொள்கிறது என்பது தெரியவந்தது. அந்தப் பகுதி சமூக ஆர்வலர்களும் நாய் தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் கூறியிருக்கின்றனர். ஆனாலும் உடனடியாக அவர்கள் நாயைப் பிடிக்கக் கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நாய் கடித்துப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தது.

வெறி நாய்!
வெறி நாய்!
சித்தரிப்புப் படம்

இரண்டு நாள்களில் மட்டும் 57 பேரை அந்த குறிப்பிட்ட ஒரு நாய் கடித்துக் குதறியது. நேற்று மட்டும் 37 பேரைக் கடித்து விட்டது. அதையடுத்து, நகராட்சி நிர்வாகம் நாயைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியது. ஒருவழியாக ஊழியர்கள் போராடி நாயைப் பிடித்துச் சென்றனர். நாய் பிடிபடும் வரை மக்கள் யாரும் தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என்றும் சிலர் சமூக வலைதளங்களில் எச்சரிக்கை செய்தனர்.

 நாய் கடித்ததில் பாதிக்கப்பட்டவர்கள்
நாய் கடித்ததில் பாதிக்கப்பட்டவர்கள்

அதே போல் நாய் பிடிபட்ட பிறகும் நகராட்சி நிர்வாகம் நாயைப் பிடித்து விட்டதாகப் பதிவிட்டனர். அதன் பிறகே மக்கள் நிம்மதியடைந்தனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், ```பட்டுக்கோட்டையில் தெரு நாய்கள் அதிகமாகச் சுற்றித் திரிகின்றன. கடந்த சில வாரங்களாகவே சிலரை நாய் கடித்ததில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஊசி போட்டு வந்தனர். அப்போது ஊசி ஸ்டாக் இல்லை, தஞ்சாவூரில் போய் போட்டுக் கொள்ளுங்கள் என மருத்துவமனை ஊழியர்கள் சொன்னதாகத் தெரிகிறது. நாய்க் கடிக்கு ஊசி இல்லை என்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து, ஊசி இருப்பு வைக்கப்பட்டது. தற்போது அந்த நாயை நகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்றுவிட்டனர்" என்றனர்.