Published:Updated:

`தேர்வை ஏன் ஒழுங்கா எழுதல!' - கண்டித்த ஆசிரியருக்கு அதிர்ச்சி கொடுத்த கல்லூரி மாணவர்

அரசு தொழில்நுட்பக் கல்லூரி
News
அரசு தொழில்நுட்பக் கல்லூரி

பாட்டிலில் இருந்த விஷத்தை சிறிதளவு குடித்துவிட்ட பிரேம்குமாரை, கொள்ளிடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர்.

Published:Updated:

`தேர்வை ஏன் ஒழுங்கா எழுதல!' - கண்டித்த ஆசிரியருக்கு அதிர்ச்சி கொடுத்த கல்லூரி மாணவர்

பாட்டிலில் இருந்த விஷத்தை சிறிதளவு குடித்துவிட்ட பிரேம்குமாரை, கொள்ளிடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர்.

அரசு தொழில்நுட்பக் கல்லூரி
News
அரசு தொழில்நுட்பக் கல்லூரி

அரசு தொழில்நுட்பக் கல்லூரியில், ஆசிரியர் கண்டித்ததால் மாணவர் ஒருவர் விஷம் குடித்த சம்பவம் கொள்ளிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புத்தூரில், சீனிவாசன் சுப்பராயலு அரசு தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சிவில் பட்டய வகுப்பு பாடப்பிரிவில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் இந்திரா நகரைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் பிரேம்குமார் (20) என்ற மாணவர் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். நேற்று காலை சுழற்சித் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில், பிரேம்குமார் சரியாக எழுதவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, சிவில் துறைத் தலைவர் பாலசுப்பிரமணியன், மாணவர் பிரேம்குமாரிடம், தேர்வை சரிவர எழுதாதது ஏன் எனக் கேட்டு கண்டித்ததாகத் தெரிகிறது.

இதனால் வெறுப்படைந்த பிரேம்குமார், கையில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை ஆசிரியர் - மாணவர்கள் எதிரிலேயே குடித்ததாகச் சொல்லப்படுகிறது. அப்போது, அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பிரேம்குமாரிடமிருந்து விஷப் பாட்டிலைப் பிடுங்கி எறிந்தனர். அதற்குள் பாட்டிலில் இருந்த விஷத்தை சிறிதளவு குடித்துவிட்ட பிரேம்குமாரை, கொள்ளிடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

விஷம் குடித்த கல்லூரி மாணவர்
விஷம் குடித்த கல்லூரி மாணவர்

இதையடுத்து, கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் வகுப்பை விட்டு வெளியேறி , கல்லூரி வாசல் முன்பு திரண்டு ஆசிரியருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்த கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் வனிதா, சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீஸார் விரைந்துவந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்னர். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இரண்டாமாண்டு சிவில் பட்டய வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேற்றிலிருந்து விடுமுறை அளிக்கப்பட்டது. இச்சம்பவத்தால், புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.