Published:Updated:

`ஊரடங்கில் நாயிடம் சிக்கிய சிறுவன்; தலையில் தையல்' - வழக்கில் சிக்கிய ஆவடி கட்டட கான்ட்ராக்டர்

மாணவனைக் கடித்த நாய்
மாணவனைக் கடித்த நாய்

சென்னை ஆவடியை அடுத்த மோரைக் கிராமத்தில், ஊரடங்கையொட்டி தனியாக நடந்து சென்ற மாணவன், நாயிடம் சிக்கினான். நாய் கடித்ததில் தலையில் தையல் போடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளான்.

சென்னை ஆவடியை அடுத்த மோரை கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன், கடைக்குச் சென்றுகொண்டிருந்தபோது, திருமலைநகர் பகுதியில் குடியிருக்கும் கட்டட கான்ட்ராக்டர் ஒருவரின் நாய், சிறுவனைப் பார்த்து குரைத்துள்ளது. பின்னர் வீட்டிலிருந்து வெளியில் வந்த நாய், சிறுவனை விரட்டியுள்ளது. பயத்தில் சிறுவனும் ஓட்டம் பிடித்துள்ளான். ஆனால், நாயிடம் அவன் சிக்கிக்கொண்டான்.

சம்பவம் நடந்த இடம்
சம்பவம் நடந்த இடம்
`முறை தவறிய நட்பு; மருமகனைத் தட்டிக் கேட்ட அத்தை!' -கொலையில் முடிந்த சென்னைக் கொடூரம்

இதையடுத்து சிறுவனின் கழுத்து, தலை பகுதியில் நாய் கடித்துள்ளது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். நாயிடமிருந்து சிறுவனை மீட்டு, ஆவடியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். பின்னர், அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்து ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுதொடர்பாக ஆவடி டேங்க் ஃபேக்ட்ரி போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகிறார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சிறுவனுக்கு அப்பா இல்லை. அம்மாவின் கவனிப்பில் உள்ளான். அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்துவருகிறான். ஊரடங்கையொட்டி வீட்டிலிருந்த சிறுவன், தனியாக கடைக்கு வந்தபோது, வீட்டின் காம்பவுண்ட் சுவருக்குள் இருந்த நாய், கதவின் அருகே நின்றபடி சிறுவனைப்பார்த்து ஆக்ரோஷமாகக் குரைத்துள்ளது.

``நள்ளிரவில் குரைத்த நாய்; கழிவறைக்குச் சென்ற பெண் பாம்பு கடித்து பலி" - சென்னையில் சோகம்
சம்பவத்தன்று காலை 10 மணியளவில் சிறுவன் அவ்வழியாக நடந்து சென்றபோதுதான், நாய் கேட்டைத்தாண்டி வெளியில் வந்து கடித்துள்ளது. சிறுவன், தன்னால் முடிந்தளவுக்கு ஓடியுள்ளான். கீழே விழுந்த சிறுவனின் தலையில் நாய் கடித்துள்ளது.
பொதுமக்கள்

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த நாயின் உரிமையாளர் அதைப் பிடித்துள்ளார். பின்னர், சிறுவனை நாயின் உரிமையாளரே மருத்துவமனைக்கும் அழைத்துச்சென்றுள்ளார். இந்த விவகாரத்தில் அஜாக்கிரதையாகச் செயல்பட்டதாக, நாயின் உரிமையாளர் குமார் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பிறகு சிறுவன் நலமாக உள்ளார்"என்றார்.

இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் கூறுகையில், ``கட்டட கான்ட்ராக்டரான குமார், வீடுகளில் விலை உயர்ந்த நாய்களை வளர்த்துவருகிறார். இரவு நேரங்களில் அந்த நாய்களைத் திறந்துவிட்டுவிடுவார். சம்பவத்தன்று காலை 10 மணியளவில் சிறுவன் அவ்வழியாக நடந்துச் சென்றபோது, கேட் பூட்டப்படாததால் நாய் வெளியில் வந்து கடித்துள்ளது. தெருவில் சென்ற சிறுவன், தன்னால் முடிந்தளவுக்கு ஓடியுள்ளான்.

கொரோனா காலத்தில் டெங்கு காய்ச்சலின் வீரியம் எப்படி இருக்கும்? #NationalDengueDay

ஆனால், ஓடிய சிறுவன் தெருவில் விழுந்ததால்தான் அவனின் தலையில் நாய் கடித்துள்ளது. நல்லவேளை சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு நாயின் உரிமையாளர் குமார் வந்துவிட்டார். அவர் மட்டும் நாயைப் பிடிக்கவில்லை என்றால் சிறுவனின் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும். தெருவில் ஆங்காங்கே ரத்தம் சிதறிக்கிடந்தது. அந்தளவுக்கு சிறுவனை நாய் கடித்துக் குதறியுள்ளது. நாய்களை வளர்ப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சிறுவனுக்கு நடந்த நிலைமை எங்கள் தெருவில் மற்றவர்களுக்கு ஏற்படாத வகையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு