Published:Updated:

‘‘4 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யுங்க!’’ - பெற்றோருடன் போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

திருவண்ணாமலை
News
திருவண்ணாமலை

ஆரணி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நான்கு பேர்மீது எடுக்கப்பட்ட துறைரீதியான நடவடிக்கையை ரத்துசெய்யக் கோரி 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Published:Updated:

‘‘4 ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யுங்க!’’ - பெற்றோருடன் போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

ஆரணி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நான்கு பேர்மீது எடுக்கப்பட்ட துறைரீதியான நடவடிக்கையை ரத்துசெய்யக் கோரி 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை
News
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகிலிருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில், ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவன் ஒருவன் கடந்த வாரம் பள்ளி நேரம் முடிந்து, மாலை வீடு திரும்பியபோது சாலையில் சிகரெட் புகைத்தபடியே சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, அருகில் சென்ற மாணவிகளின் முகத்தில் புகையைவிட்டு கேலி, கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்திருக்கிறார்கள். பெற்றோர்கள் மறுநாள் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் சம்பந்தப்பட்ட அந்த மாணவனின் ஒழுங்கீனச் செயலைக் கண்டிக்கும்படி முறையிட்டிருக்கிறார்கள். அதன்பேரில், அந்த மாணவனை அழைத்து ஆசிரியர்கள் நான்கு பேர் கண்டித்து, அடித்ததாகக் கூறப்படுகிறது.

போராட்டம்
போராட்டம்

பெற்றோரை அழைத்து வரும்படி கூறி வகுப்பறைக்குள்ளும் சேர்க்காமல் இருந்திருக்கிறார்கள். இதையடுத்து, அந்த மாணவன், தன் பெற்றோரிடம் சென்று ஆசிரியர்கள் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி, கடுமையாகத் தாக்கிவிட்டதாகச் சொல்லியிருக்கிறான். இது குறித்து, ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் ஆசிரியர்கள்மீது மாணவனின் பெற்றோர் புகாரளித்தனர். இந்த விவகாரத்தில் மாணவனுக்கு ஆதரவாக ஓர் அரசியல் கட்சி அமைப்பினரும் உள்ளே வந்ததால், விவகாரம் வேறுவிதமாக வெடித்தது. இந்த விவகாரத்தில், இரண்டு ஆசிரியர்கள் சஸ்பெண்டும், மேலும் இரண்டு ஆசிரியர்கள் டிரான்ஸ்ஃபரும் செய்யப்பட்டனர். மொத்தம் நான்கு ஆசிரியர்கள்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், நான்கு ஆசிரியர்கள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்துசெய்யக் கோரியும், உடனடியாக அவர்களை இதே பள்ளியில் பணியில் அமர்த்தக் கோரியும் வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு முன்பு இன்று காலை அமர்ந்து, சாலைமறியலில் ஈடுபட்டனர். இன்று காலாண்டுத் தேர்வு நடக்கிறது. தேர்வைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவாக அவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார்
பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார்

தகவலறிந்து வந்த திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்டக் கல்வி அலுவலர் சந்தோஷ், ஆரணி டி.எஸ்.பி ரவிச்சந்திரன் சமாதானம் செய்து, மாணவர்களைக் கலையவைக்க முயன்றனர். பின்னர், சாலையிலிருந்து எழுந்த மாணவர்கள், பள்ளி வளாகத்துக்குள் சென்று அமர்ந்து போராட்டம் செய்தனர். அப்போது, ‘பொய்யான புகாரில் நான்கு ஆசிரியர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நடவடிக்கையை ரத்துசெய்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம்’ என மாணவ, மாணவிகள் முழக்கமிட்டனர். இது தொடர்பாக, கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்திவருகிறார்கள். சம்பந்தப்பட்ட அந்தப் பள்ளிக்குள் பதற்றம் நிலவுவதால், போலீஸாரும் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.