Published:Updated:

`இவர் மதுரையின் அறிவுக்குழந்தை!' - அறிவியல் சாதனைகள் படைக்கும் பள்ளி மாணவர்; குவியும் பாராட்டுகள்

சாதனை சான்றிதழுடன்

``போலந்தில் நடைபெற்ற International Warsaw invention show-ல் கலந்துகொண்டு தனது Hydrogen fuel cell For motorized vehicle கண்டுபிடிப்பிற்காக தங்கப் பதக்கத்தையும், 2 சிறப்பு விருதுகளையும் வென்றதுடன், ருமேனியாவின் சிறப்பு விருதையும் வென்று வந்திருக்கிறார் 12 வயது அகிலேஷ்.''

`இவர் மதுரையின் அறிவுக்குழந்தை!' - அறிவியல் சாதனைகள் படைக்கும் பள்ளி மாணவர்; குவியும் பாராட்டுகள்

``போலந்தில் நடைபெற்ற International Warsaw invention show-ல் கலந்துகொண்டு தனது Hydrogen fuel cell For motorized vehicle கண்டுபிடிப்பிற்காக தங்கப் பதக்கத்தையும், 2 சிறப்பு விருதுகளையும் வென்றதுடன், ருமேனியாவின் சிறப்பு விருதையும் வென்று வந்திருக்கிறார் 12 வயது அகிலேஷ்.''

Published:Updated:
சாதனை சான்றிதழுடன்

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தனியார் பள்ளியில் பயிலும் மாணவரையும், அவரின் பெற்றோரையும் தன் அலுவலகத்துக்கு நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.

அகிலேஷை வாழ்த்தும் சு.வெங்கடேசன்
அகிலேஷை வாழ்த்தும் சு.வெங்கடேசன்

மதுரை விகாசா பள்ளியில் 7-ம் வகுப்புப் படிக்கும் மாணவன் அகிலேஷ் இளம் வயதிலேயே மிகப்பெரிய அறிவியல் சாதனைகளை செய்து அசத்தி வருகிறார். அகிலேஷின் சாதனைகளைப் பற்றி அறிந்த சு.வெங்கடேசன், அவரையும் அவரின் பெற்றோரையும் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

மாணவர் அகிலேஷிடம் பேசினோம். "நான்காம் வகுப்புப் படிக்கும் போதிருந்தே சயின்ஸ், ஸ்பேஸ், ராக்கெட் மீது ரொம்ப இன்ரஸ்ட். என் அப்பாவும், அம்மாவும் என் ஆர்வத்துக்கு சப்போர்ட் பண்ணினாங்க. அதனால அதுல இன்னும் நிறைய நிறைய கத்துக்கிட்டு இருக்கேன். மதுரையில இருந்து வெளிநாடுகள் வரை போய் என்னால இதெல்லாம் செய்ய முடியுதுனா, எல்லாத்துக்கும் அடிப்படை என் ஆர்வம்தான்'' என்றார்.

அகிலேஷ்
அகிலேஷ்

நம்மிடம் பேசிய சு.வெங்கடேசன், ``நான்காம் வகுப்பிலிருந்து, தான் கொண்ட விண்வெளி அறிவின் காரணமாக மிகச் சிறு வயதில் வரலாறுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் அகிலேஷ். 2021- ல் போலந்தில் நடைபெற்ற International Warsaw invention show-ல் கலந்துகொண்டு தனது Hydrogen fuel cell For motorized vehicle கண்டுபிடிப்பிற்காக தங்கப் பதக்கத்தையும், 2 சிறப்பு விருதுகளையும் வென்று பெரிய சாதனை படைத்துள்ளார். அதைத் தொடர்ந்து, ருமேனியாவின் சிறப்பு விருதையும் வென்று வந்திருக்கிறார்.

இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் 25 நொடிகளில் 51 சர்வதேச ராக்கெட்டுகளின் பெயர்களைக் கூறி சாதனை படைத்துள்ளார். அந்த சாதனை தற்போது இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸுக்கும் தேர்வாகியுள்ளது.

தனியாக செயற்கைக்கோள் ஒன்றினை செய்து அதனை வெற்றிகரமாக முடித்திருக்கிறார். அது நிச்சயம் அவரது கனவுகளை விண்ணில் ஏற்றிச் செல்லும். எனவே, மதுரையின் அறிவுக்குழந்தைக்கு எல்லா வகையிலும் உடன் நிற்பேன் எனக்கூறி அகிலேஷை ஊக்கப்படுத்தினேன்.

அகிலேஷை வாழ்த்தும் சு.வெங்கடேசன்
அகிலேஷை வாழ்த்தும் சு.வெங்கடேசன்

விண்வெளி சார்ந்த அகிலேஷின் அறிவு மேலும் விரிந்து பரவட்டும். வளர்ந்து மண்ணின் பெருமையை விண்ணில் உயர்த்துவான்.

தங்கள் குழந்தையின் அறிவையும் தேடலையும் புரிந்து கொண்டு 12 வயதிலயே அதற்கான ஊக்கத்தை அளித்து வரும் அகிலேஷின் பெற்றோர்கள் சந்திரசேகரன் - தங்கமணிக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்" என்றார்.

சிறுவன் அகிலேஷ், சு.வெங்கடேசன் எம்.பி முன்னிலையில் சில நொடிகளில் 51 சர்வதேச ராக்கெட்டுகளின் பெயர்களைக் கூறி அசர வைக்க, அனைவரும் அவரை பாராட்டினர்.