Published:Updated:

மியான்மரில் தவிக்கும் தமிழர்கள்: `முயற்சிகள் வெற்றிபெறும்’ தூதரகத்தின் பதில் குறித்து சு.வெங்கடேசன்

மியான்மர்

``இதுவரை மியாவாடி பகுதியிலிருந்து 30 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களையும் விரைவில் மீட்க முயன்றுவருகிறோம்.”

மியான்மரில் தவிக்கும் தமிழர்கள்: `முயற்சிகள் வெற்றிபெறும்’ தூதரகத்தின் பதில் குறித்து சு.வெங்கடேசன்

``இதுவரை மியாவாடி பகுதியிலிருந்து 30 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களையும் விரைவில் மீட்க முயன்றுவருகிறோம்.”

Published:Updated:
மியான்மர்

மியான்மருக்கு வேலைக்குச் சென்ற இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் அங்கு ஆபத்தில் சிக்கியிருப்பதாகத் தகவல் வந்துகொண்டிருக்கும் நிலையில் தமிழர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் முயன்றுகொண்டிருக்கின்றன.

சு.வெங்கடேசன் எம்.பி.
சு.வெங்கடேசன் எம்.பி.

இந்த நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், "மியான்மரில் சிக்கித் தவிக்கும் நான்கு தமிழர்களை மீட்க வேண்டுமென்று  21.09.2022 அன்று மியான்மரிலுள்ள இந்தியத் தூதருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

அதற்கு இந்தியத் தூதர் வினய்குமார் அளித்துள்ள பதிலில், 'தாய்லாந்தில் வேலை வாங்கித்தருவதாக இந்திய மற்றும் வேறு சில அந்நிய நாடுகளின் இளைஞர்களை ஏமாற்றி அழைத்து வந்து சட்ட விரோதமாக மியான்மரில் வைத்திருக்கிற ஒரு சர்வதேச மோசடிக் கும்பல் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது.

இந்தியத் தூதரின் கடிதம்
இந்தியத் தூதரின் கடிதம்

மியாவாடி என்கிற இடத்தில் அவர்கள் இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த இடம் மியான்மர் அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இல்லை. ஆயுதம் தாங்கிய இனக்குழுக்களின் செல்வாக்கின் கீழ் அது இருக்கிறது.

இங்கேதான் இந்திய மற்றும் அந்நியக் குடிமக்கள் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ளனர். இங்கிருந்து அங்கு பயணம் சாத்தியமில்லை. தாய்லாந்து முனையிலிருந்து அவர்கள் அங்கே கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கிடைத்துள்ள தகவல்களின்படி 90 இந்தியர்கள் இந்த மோசடி வலைக்குள் வீழ்ந்துள்ளனர். அவர்களில் 60 பேர் மியாவாடி பகுதிக்குள் மோசடிக் கும்பலால் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

நாங்கள் தொடர்ந்து மியான்மர் அரசுடனான ஒருங்கிணைப்புடன் நிலைமைகளை கவனித்துவருகிறோம். பல்வேறு வழிமுறைகள் வாயிலாக, வணிக சமூகத் தொடர்புகளையும் பயன்படுத்தி இந்தியர்களை மீட்க முயன்றுவருகிறோம். காரணம் அந்தப் பகுதி உள்ளூர் அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் முழுவதும் இல்லாத நிலையில் இருப்பதுதான்.

இதுவரை மியாவாடி பகுதியிலிருந்து 30 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களையும் விரைவில் மீட்க முயன்ருவருகிறோம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கடிதம் அனுப்பிய 24 மணி நேரத்துக்குள் பதில் தந்திருக்கும் மியான்மரின் இந்தியத் தூதருக்கு நன்றி. உங்கள் முயற்சிகள் வெற்றிபெற்று எல்லா இந்தியர்களும் மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.