Published:Updated:

ஊட்டி: வீடுகளில் குறுக்கும் நெடுக்குமாக விரிசல்கள்; அச்சத்தில் மக்கள் - அதிகாரிகள் சொல்வதென்ன?

வீடுகளில் திடீர் விரிசல்

வீட்டுக்குள் இருக்கவே பயமாக இருக்கிறது. எவ்வளவோ மழை பெய்த காலங்களில் கூட இந்த மாதிரி பாதிப்பு ஏற்பட்டதில்லை. விரைவில் உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்

ஊட்டி: வீடுகளில் குறுக்கும் நெடுக்குமாக விரிசல்கள்; அச்சத்தில் மக்கள் - அதிகாரிகள் சொல்வதென்ன?

வீட்டுக்குள் இருக்கவே பயமாக இருக்கிறது. எவ்வளவோ மழை பெய்த காலங்களில் கூட இந்த மாதிரி பாதிப்பு ஏற்பட்டதில்லை. விரைவில் உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்

Published:Updated:
வீடுகளில் திடீர் விரிசல்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கோக்குடல் கிராமம். இயற்கை எழில் கொஞ்சும் மலைச்சரிவில் அமைந்திருக்கும் இந்த கிராமத்தில் 30 குடும்பங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த கிராம மக்கள் பெரும்பாலும் பசுந்தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீடுகளில் திடீர் விரிசல்
வீடுகளில் திடீர் விரிசல்

இந்த கிராமத்தில் உள்ள 10 வீடுகளில் குறுக்கும் நெடுக்குமாக திடீரென விரிசல்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தடுப்பு சுவர்கள் முதல் வீட்டின் தரை வரை பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு தொடர்ந்து விரிசல் அதிகரித்தபடி இருக்கிறது. வீட்டின் சுவர்கள் இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் இந்த கிராம மக்கள் வீடுகளில் குடியிருந்து வருகின்றனர்.

சுவர்களில் ஏற்படும் திடீர் விரிசல் குறித்து நம்மிடம் பேசிய கோக்குடல் கிராமத்தைச் சேர்ந்த தேவகி, ``கூடலூரில் உள்ள மகள் வீட்டில் தங்கியிருந்தேன். வீடுகளில் விரிசல் ஏற்பட்டு வருவதாக உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். வந்து பார்த்த போது வீட்டின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. 10 வீடுகளில் இதேபோல் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. வீட்டுக்குள் இருக்கவே பயமாக இருக்கிறது. எவ்வளவோ மழை பெய்த காலங்களில் கூட இந்த மாதிரி பாதிப்பு ஏற்பட்டதில்லை. விரைவில் உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் " என்றார்.

வீடுகளில் திடீர் விரிசல்
வீடுகளில் திடீர் விரிசல்

இந்த விவகாரம் குறித்து நீலகிரி மாவட்ட அதிகாரிகளிடம் கொண்டு பேசினோம், ``கடநாடு பஞ்சாயித்திற்குட்பட்ட கோக்குடல் பகுதியில் சில வீடுகளில் திடீரென விரிசல்கள் ஏற்பட்டிருப்பதாக கிராம மக்கள் தகவல் அளித்தனர். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அங்கு சென்று ஆய்வு செய்தோம். புவியியல் துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தோம். அவர்களும் வந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், சென்னையில் உள்ள பேரிடர் மேலாண்மைத்துறைக்கு தகவல் அளித்திருக்கிறோம். அவர்களும் வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் பெரிய அளவிலான தடுப்பு சுவர் அமைப்பதா அல்லது மாற்று பரிந்துரைகள் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம்" என்றனர்.