Published:Updated:

மார்கழியில் திடீர் மழை; இன்னும் எத்தனை நாள் தொடரும்? வானிலை ஆராய்ச்சி மையத்தின் பதில்!

மழை
News
மழை ( rain )

``சென்னையில் டிசம்பர் 31, ஜனவரி 1 இரண்டு நாள்களும் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் காற்று, இடியுடன்கூடிய கனமழை பெய்யும்." - பாலச்சந்திரன்

நவம்பர் மாத இறுதியில் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து தீர்த்தது. சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைத்தது. அதன் பிறகு மழை குறைந்து மார்கழி மாதம் ஆரம்பித்ததிலிருந்து குளிர்ந்த வானிலை நிலவி வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாள்களாகத் திடீரென்று காற்றுடன் கூடிய மழை ஆங்காங்கே பெய்துவருகிறது. இந்த மழைக்கான காரணம், மழையின் தீவிரம் மற்றும் மேலும் தொடருமா என்பது குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரனிடம் பேசினோம்.

பாலச்சந்திரன்
பாலச்சந்திரன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்போது பேசிய அவர், ``வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கடல் பகுதிகளில் கிழக்கு நோக்கி காற்று வீசுவதால் இந்த மழை பெய்துவருகிறது. சில தினங்களுக்கு முன்பே மழை குறித்து கணித்து அறிக்கை வெளியிட்டிருந்தோம்.

வரும் ஜனவரி 3-ம் தேதி வரை இந்த வானிலை தொடரும். மழையின் தீவிரம் பயப்படும் அளவுக்கு இருக்காது. கடலோர மாவட்டங்களில் மட்டும் இடியுடன்கூடிய மிதமான மழை பெய்யும். வெயில் இருக்கும் திடீரென்று மழை பெய்யும்.

மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே இருக்கும். சென்னையில் டிசம்பர் 31, ஜனவரி 1 இரண்டு நாள்களும் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் காற்று, இடியுடன்கூடிய கனமழை பெய்யும்.

ஜனவரி 1-ம் தேதி வரை கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காரைக்கால் ஆகிய மாவட்டங்களிலும் புதுவையிலும் இடியுடன்கூடிய கனமழை பெய்யக்கூடும்.

தொடர் கனமழை
தொடர் கனமழை

ஜனவரி 2-ம் தேதி தமிழகத்தில் கடலோரா மாவட்டங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன்கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜனவரி 3-ம் தேதி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஆங்காங்கே பலத்தக் காற்றுடன்கூடிய மழை பெய்யக்கூடும்" என்றார்.