Published:Updated:

ராமநாதபுரம்: அலுவலர்கள் அலட்சியம்... கலெக்டர் முன் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்ட திருநங்கை! - பரபரப்பு

மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டபோது
News
மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டபோது

மதிய உணவுக்காக கலெக்டர் சங்கர்லால் குமாவத் கிளம்பி போர்டிகோ வந்தபோது அவர் கார் முன்னால் அமர்ந்து திருநங்கைகள் ஆர்பாட்டம் நடத்திக்கொண்டிருந்தனர்.

கலெக்டர் முன் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற திருநங்கையால் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் அதிர்ச்சியும் பரபரபுப்பும் ஏற்பட்டது.

கலெக்டர் கார் அருகே போராட்டம்
கலெக்டர் கார் அருகே போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் சக தோழிகளுடன் வசித்துவருபவர் திருநங்கை சிவன்யா. இவரும் மற்றவர்களும் தங்களுக்கு இலவச வீடு ஒதுக்கும்படி நீண்டகாலமாக, தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துவருகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதன் அடிப்படையில் அவர்களுக்கு ராமநாதபுரம் புறநகர் பகுதியில் இலவச வீடு கட்டிக்கொடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவுசெய்து இடம் ஒதுக்கியதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், அது சம்பந்தமான எந்த வேலையும் தொடங்காமல் காலம் கடத்துவதாகவும், அதை நினைவூட்ட கலெக்டரிடம் மீண்டும் மனு அளிக்கவும் சிவன்யா தலைமையில் திருநங்கைகள் வந்தனர்.

கலெக்டர் பிரச்னையைக் கேட்கிறார்
கலெக்டர் பிரச்னையைக் கேட்கிறார்

மனு வாங்கும் இடத்தில் அமர்ந்திருந்த அலுவலர்கள், கலெக்டரிடம் மனுவைக் கொடுக்கவிடாமல் தாங்களே வாங்கி, தூக்கி எறிந்ததாக புகார் எழுப்பிய திருநங்கைகள், கலெக்டரின் கார் நிற்கும் இடத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மதிய உணவுக்காக கலெக்டர் சங்கர்லால் குமாவத் கிளம்பி போர்டிகோ வந்தபோது, அவர் கார் முன்னால் அமர்ந்து திருநங்கைகள் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது திருநங்கை சிவன்யா தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரைத் தடுத்துக் காப்பாற்றினர்.

திருநங்கைகள்
திருநங்கைகள்

இதைப் பார்த்து அங்கிருந்த கலெக்டர் அதிர்ச்சியடைந்தாலும், பின்பு அவர்களின் பிரச்னையைக் கேட்டவர், மிக விரைவில் இலவச வீடு கட்டித்தரப்படும் என்று உத்தரவாதம் அளித்தார். அதனால் போராட்டத்தை முடித்துக்கொண்டனர். இந்தச் சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரத்துப்போனது.