Published:Updated:

தொடர்ந்து அதிகரிக்கும் நீர்வரத்து: புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் திறப்பு!

புழல் ஏரியில் நீர் திறப்பு

தொடர் கனமழை காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனால் சென்னையில் இரண்டு ஏரிகளில் நீர் திறக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து அதிகரிக்கும் நீர்வரத்து: புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் திறப்பு!

தொடர் கனமழை காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனால் சென்னையில் இரண்டு ஏரிகளில் நீர் திறக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
புழல் ஏரியில் நீர் திறப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை மற்றும் சென்னையை ஒட்டிய செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக, சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஏரிகளுக்குத் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ள காரணத்தினால் புழல், செம்பரம்பாக்கம் ஆகிய இரண்டு ஏரிகளிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு

சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்யும் பிரதான ஏரியான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து வினாடிக்கு 1,180 கன அடியாக இருந்த நிலையில், ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், இரண்டாவது ஷட்டர் வழியாக ஏரியிலிருந்து வினாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல, புழல் ஏரிக்குத் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்திருப்பதால், வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரிக்கும் நிலையில், கூடுதல் உபரிநீர் திறக்கப்படும் என்பதால் உபரிநீர் செல்லும் பகுதிகளுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், நீர் செல்லும் பகுதியின் இருபுறமும் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புழல் ஏரியில் நீர் திறப்பு
புழல் ஏரியில் நீர் திறப்பு

இலங்கையை ஒட்டியுள்ள தென்தமிழக கடலோர பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடிக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. மேலும் நவம்பர் 6-ம் தேதிவரை கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நாளை (நவம்பர் 03) மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி போன்ற பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மழை
சென்னை மழை

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளால் இடி மின்னலுடன் கூடிய பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.