Published:Updated:

`மன அழுத்தம் குறைய.. நிம்மதியடைய..!' - கோவையில் பிச்சையெடுக்கும் ஸ்வீடன் தொழிலதிபர்

ஸ்வீடன் கிம்
ஸ்வீடன் கிம்

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் கோவையில் பிச்சை எடுத்து வருகிறார்.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கிம். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார். இதையடுத்து, கோவை ஈஷா யோக மையம் வந்துள்ளார்.

ஸ்வீடன் கிம்
ஸ்வீடன் கிம்

அங்கு சிறிது காலம் சேவை செய்த அவர், பிறகு அங்கிருந்தும் வெளியே வந்துள்ளார். இதையடுத்து, ரயில்நிலையம், கலெக்டர் அலுவலகம் என்று கோவையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்குச் சென்று பிச்சையெடுத்து வருகிறார்.

`குடிகார கணவர்; குழந்தைகளின் பசி!’- ராமநாதபுரத்தில் பிச்சை எடுத்த பெண்ணுக்கு உதவிய காவல்துறை

இதுகுறித்து கிம் கூறுகையில், ``எனது தாய் நாட்டிலேயே மக்களுக்கு உதவி செய்துவந்தேன். ஆனால், அது எனக்கு மன நிம்மதியைக் கொடுக்கவில்லை. கோவை ஈஷா யோக மையம் வந்தேன்.

ஸ்வீடன் கிம்
ஸ்வீடன் கிம்

அதே நேரத்தில், ஏழை எளிய மக்கள்போல சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகத்தான் மக்களிடம் பிச்சையெடுத்து, எனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறேன். இது எனக்கு மன நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது” என்றார்.

`பிச்சையெடுப்பதன் மூலம் மன அழுத்தம் குறையும்’ என்று தனது ஆன்மிக குரு சொன்ன அறிவுரைப்படி பிச்சையெடுப்பதாக போலீஸாரிடம் கிம் தெரிவித்துள்ளார். மக்கள் கொடுக்கும் 5 மற்றும் 10 ரூபாய்களைப் பெற்றுக்கொண்டு, அதில் உணவுகளை வாங்கி உண்டு மகிழும் கிம், காசு கொடுக்கும் மக்களை இருகரம் கூப்பி நன்றி தெரிவிக்கிறார்.

ஸ்வீடன் கிம்
ஸ்வீடன் கிம்

வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் இங்கு பிச்சையெடுப்பதை கோவை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு