பெங்களூரில் பணிபுரிந்து வரும் பெண் செவிலியர், நான்கு நீச்சல் வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
டெல்லியைச் சேர்ந்த நீச்சல் வீரர்களான ரஜத், ஷிவரன், தேவ் சரோய் மற்றும் யோகேஷ் குமார் ஆகியோர் பெங்களூரில் நடைபெற்ற நீச்சல் பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ள வந்துள்ளனர். அங்கு செவிலியராகப் பணிபுரியும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண்ணை இரவு உணவுக்கு அழைத்துள்ளனர். அக்டோபர் 24-ம் தேதி இரவு உணவு சாப்பிடச் சென்ற அப்பெண்ணை ரஜத்தின் அறையில் வைத்து நான்கு பேரும் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
மார்ச் 25 அன்று இது குறித்து காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தலைமறைவாகினர். எனவே, சம்பவத்தில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளைக் கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டது. பெங்களூரின் வெவ்வேறு இடங்களில் நால்வரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இது குறித்து காவல்துறை ஆணையர் விநாயக் பாட்டீல் தெரிவிக்கையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மாநில அல்லது தேசிய அளவிலான நீச்சல் வீரர்களா என்பதைக் கண்டறிய முயன்று வருவதாகவும், இந்த நீச்சல் வீரர்கள் பசவனகுடி மற்றும் சதாசிவநகர் நீச்சல் குளங்களுக்கு பலமுறை சென்றுள்ளதாகவும், தற்போது இவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.