Published:Updated:

`ஆண்டவன்னா அர்ச்சனை இருக்கும்; மனிதன்னா பிரச்னை இருக்கும்!' -விஜய் வீட்டில் ரெய்டு குறித்து டி.ஆர்

சித்திரகுப்தர் ஆலயத்தில் டி.ராஜேந்தர்
சித்திரகுப்தர் ஆலயத்தில் டி.ராஜேந்தர்

``மடியில இல்லை கனம்… வழியில இல்லை பயம்… பேச்சில இருக்குது நயம்… எல்லாத்துக்கும் காரணம் டைம். இறைவன் நினைத்தால் கிடைக்கும் ஜெயம்" - டி.ஆர்

சிலம்பரசனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் எனக் கோயில் கோயிலாக ஆன்மிக வலம் வருகிறார் டி.ராஜேந்திர். ஒரு தந்தையாகத் தன் மனதில் இருக்கும் பாரத்தைப் பகவானிடம் கொட்டித் தீர்த்து வருவதாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று இரவு காஞ்சிபுரம் சித்திரகுப்தரை தரிசிக்க வந்திருந்தார். தரிசனம் முடிந்த நிலையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர்

``சித்திரகுப்தன், கேது பகவான் அருளால் என் மகன் சிலம்பரசனுக்கு விரைவிலேயே திருமண பாக்கியம் கிடைக்க வேண்டும். லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் எஸ்.டி.ஆர் ரசிகர் மன்றத்தின் விருப்பமும் அதுதான். இதற்காகத்தான் நான் காஞ்சிபுரம் வந்துள்ளேன். அத்திவரதரை தரிசித்தது எனக்கு வாழ்க்கையில் கிடைத்த பெரும் பாக்கியம். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. அதுபோல சித்திரகுப்தர் வழிபாட்டுக்கும் நல்ல பலன் கிடைக்கும்" என்றார். அதன் பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

தமிழக பட்ஜெட் குறித்து உங்கள் கருத்து என்ன?

``திரைத்துறையில் இந்தியா முழுவதும் ஜி.எஸ்.டி ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் கேளிக்கை வரி எனச் சொல்லி கூடுதலாக 8 சதவிகிதம் வரி வசூலிக்கிறார்கள். ஆந்திரா, கர்நாடகா என எந்த மாநிலத்திலும் இதுபோல் வரி வசூலிப்பது கிடையாது. தமிழ்த் திரைத்துறை நலிந்துகொண்டே செல்கிறது. திரையரங்குகளுக்கு மக்கள் வரத் தயங்குகிறார்கள். இந்தக் கேளிக்கை வரியை முதலில் நீக்க வேண்டும். தமிழக பட்ஜெட் மக்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்துப் பேச வேண்டிய நேரத்தில் பேசுகிறேன். ஏழை மக்களுக்கு உணவு கிடைக்கணும்னு அம்மா உணவு திறக்கிறீங்களே, அதுபோல ஏழை மக்கள் படம் பார்ப்பதற்கு என்ன செய்யப்போறீங்க?”

டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர்

விஜய் வீட்டில் ரெய்டு நடந்தது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

``காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி ஆட்சி இருந்தபோது என் வீட்டில் வருமானவரி சோதனை நடத்தினார்கள். அப்போது பல பிரச்னைகளை நான் சந்தித்தேன். ஆண்டவன்னு சொன்னா அர்ச்சனை இருக்கும்… மனிதனா பிறந்தா சில பிரச்னைகள் இருக்கும். நான் அரசியலிலிருந்ததால் சொல்கிறேன், சில நேரங்களில் சில பிரச்னைகளைச் சந்தித்துதான் தீர வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் நான் சிதைக்கப்பட்டிருக்கிறேன். கீழே இருப்பவர்கள் மேலே செல்வார்கள். மேலே இருப்பவர்கள் கீழே செல்வார்கள்.”

அரசியலுக்கு வந்தாலே ரெய்டு நடக்குமா?

``வருமானவரி சோதனை எதற்கு நடத்துகிறார்கள்? எங்கள் கை சுத்தமாக இருக்கிறது எனப் பேச வேண்டியவர்கள் பேசட்டும். என் மீது வருமானவரி சோதனை நடந்தபோது நான் நீதிமன்றத்துக்குச் சென்று போராடினேன். மடியில இல்லை கனம்… வழியில இல்லை பயம்… பேச்சில இருக்குது நயம்… எல்லாத்துக்கும் காரணம் டைம். இறைவன் நினைத்தால் கிடைக்கும் ஜெயம்.“

டி.ஆர்
டி.ஆர்

சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாவதில் சிக்கல் இருக்கிறதே?

``சின்ன பட்ஜெட் படம் பார்க்க வேண்டும் என்றால் டிக்கெட் குறைவாக இருந்தால்தான் மக்கள் படம் பார்ப்பார்கள். அந்த படத்துக்குச் சாதாரண ஏழையால் முடியுமா? கட்டணம் குறைக்கப்பட வேண்டும்.''

அடுத்த கட்டுரைக்கு