Published:Updated:

``இலங்கைச் சிறையில் உணவின்றி சித்ரவதை அனுபவித்தோம்..!" - விடுதலையான மீனவர்கள் கண்ணீர்

விடுதலையான மீனவர்கள்

``சாப்பாடு கேட்டால், `நாங்களே ஒருவேளை சாப்பாடு கிடைக்காமல் தவிக்கிறோம். உங்களுக்கு என்ன சாப்பாடு கேட்கிறது... பட்டினியாகக் கிடங்கள்' என எங்களை அடித்துத் துன்புறுத்தினர்." - தமிழக மீனவர்கள்.

``இலங்கைச் சிறையில் உணவின்றி சித்ரவதை அனுபவித்தோம்..!" - விடுதலையான மீனவர்கள் கண்ணீர்

``சாப்பாடு கேட்டால், `நாங்களே ஒருவேளை சாப்பாடு கிடைக்காமல் தவிக்கிறோம். உங்களுக்கு என்ன சாப்பாடு கேட்கிறது... பட்டினியாகக் கிடங்கள்' என எங்களை அடித்துத் துன்புறுத்தினர்." - தமிழக மீனவர்கள்.

Published:Updated:
விடுதலையான மீனவர்கள்

ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் பகுதியிலிருந்து கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மூன்று படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 19 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர், கடந்த மாதம் 25-ம் தேதி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 19 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் இலங்கையின் கொழும்பிலிருந்து விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். நேற்று காலை, சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய 19 மீனவர்களையும், மீன்வளத்துறை அதிகாரிகள் வேனில் ராமேஸ்வரத்துக்கு அழைத்துவந்தனர். அவர்களில் மூன்று மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
விடுதலையான ராமேஸ்வரம் மீனவர்கள்
விடுதலையான ராமேஸ்வரம் மீனவர்கள்

விடுதலையாகி வந்த மீனவர் நாகநாதன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ``நாங்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டோம். இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் எங்களுக்கு உணவு வழங்கப்படவில்லை. சாப்பாடு கேட்டால், `நாங்களே ஒருவேளை சாப்பாடு கிடைக்காமல் தவிக்கிறோம். உங்களுக்கு என்ன சாப்பாடு கேட்கிறது... பட்டினியாகக் கிடங்கள்' என எங்களை அடித்துத் துன்புறுத்தினர். சரியான உணவு கிடைக்காமல் அதிக கஷ்டப்பட்டோம். இன்னும் பல சித்ரவதைகளை வெளியே சொல்ல முடியாத அளவுக்கு அனுபவித்தோம். சிறையில் இன்னும் 12 மீனவர்கள் சாப்பாடு கிடைக்காமல் சித்ரவதைகளை அனுபவித்துவருகின்றனர். அந்த மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கண்ணீர்மல்க கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism