Published:Updated:

ஹாட் ஏர் பலூன் பெஸ்டிவல்: Thaikkudam Bridge மியூசிக்; ராஜேஷ் வைத்யா கச்சேரி எனத் தயாராகும் நிகழ்ச்சி

ஹாட் ஏர் பலூன்

தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழாவின் (TNIBF) எட்டாவது பதிப்பு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது, ஜனவரி 13 முதல் 15 வரை, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற உள்ளது.

ஹாட் ஏர் பலூன் பெஸ்டிவல்: Thaikkudam Bridge மியூசிக்; ராஜேஷ் வைத்யா கச்சேரி எனத் தயாராகும் நிகழ்ச்சி

தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழாவின் (TNIBF) எட்டாவது பதிப்பு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது, ஜனவரி 13 முதல் 15 வரை, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற உள்ளது.

Published:Updated:
ஹாட் ஏர் பலூன்
உலகளவில் லட்சக்கணக்கான மக்களால் பார்வையிட்டுக் கொண்டாடி வரும் ஹாட் ஏர் பலூன் திருவிழா, தமிழ்நாட்டிலும் நடைபெறுகிறது என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழாவின் (TNIBF) எட்டாவது பதிப்பு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது, ஜனவரி 13 முதல் 15 வரை, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற உள்ளது. பிரேசில், நெதர்லாந்து, கனடா, பெல்ஜியம், ஸ்பெயின், வியட்நாம், பிரான்ஸ், தாய்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஹாட் ஏர் பலூன்கள் விழாவிற்கு வரும். மாநில சுற்றுலாத் துறையுடன் இணைந்து குளோபல் மீடியா பாக்ஸ் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்கிறது.

“இம்முறை இன்னும் பெருசா ! குடும்பம் குடும்பமா கொண்டாடும் வகையில் இருக்கும் “ என ஆர்வம் கலையாமல் பேசுகிறார் பெனடிக்ட் சாவியோ, நிறுவனர், TNIBF மற்றும் இயக்குநர், குளோபல் மீடியா பாக்ஸ்.

ஹாட் ஏர் பலூன்
ஹாட் ஏர் பலூன்

“2010-ம் ஆண்டு நடைபெற்ற  உலகத் தமிழ் மாநாடு நிகழ்விலிருந்தே ஹாட் ஏர் பலூன் திருவிழாவுக்கான வேலைகள் தொடங்கின. அப்போது நாங்கள் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை . ஆனால் , தற்போது மக்கள் ஆதரவு நன்கு பெருகியிருக்கிறது . அதற்கு உதாரணம், நாங்கள் சமீபத்தில் சென்னையில் வெற்றிகரமாக நடத்திய Kite பெஸ்டிவல். ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு மகிழ்ந்தனர். அதேபோல் 2023 பொங்கல் அன்று பொள்ளாச்சியில் நடக்கவிருக்கும் ஹாட் ஏர் பலூன் திருவிழாவிற்கும் மக்களிடம் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது” என்றார்.

தமிழ்நாட்டில் குறிப்பாக பொள்ளாச்சியில் விழா நடத்துவதற்கு என்ன காரணம் என்று நாம் கேட்கும் முன்பே குறுக்கிட்டு பதிலளித்தார் .

“உலகளவில் பெரிய அளவிற்கு நடத்தப்படும் பலூன் பெஸ்டிவல், அமெரிக்காவில் இருக்கும் Albuquerque-அல்புகெர்கி என்னும் இடத்தில். அந்த இடம் ஒரு பாலைவனம். மெயின் சிட்டி கிடையாது. தற்போது அமெரிக்காவில் பலூன் திருவிழாக்கான பிரத்யேக இடமாக மாறிவிட்டது.

அவ்வாறு ஒரு டெஸ்டினேஷன் Tourism ஆக பொள்ளாச்சியை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். மட்டுமல்லாமல், இந்தத் திருவிழாவிற்கு உகந்த இடமும் பொள்ளாச்சிதான். அதன் அழகான நிலப்பரப்பு, வியூ, தட்பவெப்பம் எல்லாமே பலூன் விழா நடத்த ஏதுவாக அமைந்திருக்கின்றன.

ஹாட் ஏர் பலூன்
ஹாட் ஏர் பலூன்

சுற்றுலாத்துறை எங்களுக்கு மிகவும் பக்கபலமாக இருக்கிறது. அங்கே வேலை செய்யும் இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்தோடு எங்களுக்கு உதவி செய்தார்கள்.

தற்போது பிரேசில், அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து டைனோசர், கரடி, கார்ட்டூன் வடிவில் விதவிதமான பலூன்கள் வந்து இறங்கிவிட்டன. பலூன்களின் உயரம் சராசரி 60 அடி முதல் 100 அடி வரை இருக்கும். எந்தவிதமான ஆபத்து காரணிகளும் இல்லை. குடும்பம் குடும்பமாக மக்கள் திரண்டு ஒரு பேமிலி கார்னிவல் போல கொண்டாட அனைத்து வசதிகளும் ரெடி! ” என்றவரிடம், ”பலூனில் ரைடு ஏதும் போக முடியுமா? எங்களுக்கு ஒரு ரைடு தருவீங்களா?” என்று கேட்டோம்.

“நிறைய பேர் இந்தக் கேள்வி கேட்கிறார்கள். இந்த விழா, பிரமாண்டமாகப் பறக்கும் பலூன்களை மக்கள் வியப்புடன் கண்டு மகிழவே நடத்தப்படுகிறது. ரைடு மேற்கொள்ளவும் சில ஏற்பாடுகள் செய்துவருகிறோம். ஆனால், அனைத்து வயதினருக்கும் அது சாத்தியமில்லை. மேலும், நிறைய கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கிறோம்.

'Thaikkudam Bridge' மியூசிக் பேண்ட் வராங்க... ராஜேஷ் வைத்யா கச்சேரி எனப் பல நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன.

மக்களை மகிழவைப்பதோடு மட்டுமல்லாமல் எங்களுக்கு இன்னொரு ஆசை இருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து ஒரு பலூன் பைலட்டாவது உருவாக வேண்டும். எனவே பலூன் பைலட் ஆவதற்கான பயிற்சியும் வழங்க இருக்கிறோம். ஆர்வம் இருக்கும் இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஹாட் ஏர் பலூன்
ஹாட் ஏர் பலூன்

ஒரு விமான பைலட் ஆவதற்கு எழுதும் அதே தேர்வுதான் ஹாட் ஏர் பலூன் பைலட்டுக்கும். செயல்முறைத் தேர்வு மட்டுமே வேறுபாடும். இது நிறைய பேருக்குத் தெரியவில்லை. ஹாட் ஏர் பலூன் பைலட்டுக்கான விழிப்புணர்வு படிப்படியாக வரும் என நம்புகிறேன்” என்றவரிடம் கடைசியாக, ”சிறப்பு விருந்தினரா யாரை எதிர்பார்க்கலாம்?” என்று கேட்டோம்.

“சென்ற முறை (2019 ஜனவரி) ஜி .வி . பிரகாஷ் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்த முறையும் நிச்சயம் திரைப் பிரபலம் யாராவது கலந்துகொள்வார்கள்.

இந்த டிஜிட்டல் உலகில் மக்கள் அனைவரும் செல்போன், லேப்டாப் உடன் நான்கு சுவருக்குள் அடைந்துகிடக்கும் நிலையில், இந்த ஹாட் ஏர் பலூன் திருவிழா புது அனுபவமாகவும் கொண்டாட்டமாகவும் இருக்கும்” என்று நம்பிக்கையோடு பதிலளித்தார் பெனடிக்ட்.