Published:Updated:

சூரிய கிரகண நேரத்தில் மட்டும்தான் உலக்கை நிற்குமா? - செயல்விளக்கம் காட்டிய அறிவியல் இயக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சூரிய கிரகணம்
சூரிய கிரகணம் ( எம். விஜயகுமார் )

சேலத்தில் சூரிய கிரகணம் பற்றி விழிப்புணர்வு.

சூரிய கிரகணம் பற்றி நிறைய நம்பிக்கைகள் உண்டு. இந்தியாவில் ராகு, கேது என்ற பாம்புகள் சூரியனை விழுங்குவதால் சூரிய கிரகணம் ஏற்படுவதாக நம்பிக்கை நிலவுகிறது. டிராகன் என்ற மிருகம் சூரியனை விழுங்குகிறது என்று சீனாவிலும் மூம்பா என்ற அரக்கன் சூரியனை விழுங்குகிறான் என்று ஆப்பிரிக்காவிலும் நம்பிக்கை நிலவுகின்றன. அதே நேரம் நிறைய கட்டுக்கதைகளும் நிலவுகின்றன.

தொலை நோக்குக் கருவி
தொலை நோக்குக் கருவி

இன்று சூரிய கிரகணம் காலை 10.15 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நிகழ்ந்தது. சூரிய கிரகணத்தின்போது இந்தியாவின் சில மாநிலங்களில் சூரியன் வளைய வடிவில் தெரிந்தது. தமிழகத்தில் பகுதி சூரிய கிரகணமாகத் தெரிந்தது. அதிகபட்ச மறைப்பு 11.40 மணி முதல் 12.10 மணியாக இருந்தது.

தமிழ்நாடுஅறிவியல் இயக்கத்தின் சார்பாக சேலம் இரும்பாலை மாரமங்கலத்துப்பட்டியில் உள்ள பொதுமக்களுக்கு சூரிய கிரகணத்தைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கு சோலார் பில்டர் கண்ணாடிகளை வழங்கி சூரிய கிரகணத்தைப் பார்த்து ரசிக்கச் செய்தனர். மேலும், உலக்கையை நிற்க வைத்தும் காட்டினர்.

சூரிய கிரகணம்
சூரிய கிரகணம்

வானவியல் கருத்தாளரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினருமான ஜெயமுருகன், ``சூரியன், நிலவு, பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது சூரியனின் வெளிச்சம் பூமியில் படாமல் நிலவு மறைக்கும். அப்போதுதான் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இது வானில் நடக்கும் இயல்பான நிகழ்வு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சூரிய கிரகணத்தின்போது வெளியே வரக் கூடாது; சமையல் செய்யக் கூடாது; சாப்பிடக் கூடாது; தண்ணீர் குடிக்கக் கூடாது; கர்ப்பிணிப் பெண்கள் பணிகள் செய்யக்கூடாது; சூரிய கிரகணத்தின்போது உலக்கை செங்குத்தாக நிற்கும். கிரகணம் முடிந்ததும் கீழே விழுந்துவிடும் என்றெல்லாம் பல தவறான விஷயங்கள் பரவியிருக்கின்றன. அனைத்துமே பொய். கிரகணத்தின்போது சமைக்கலாம், சாப்பிடலாம், தண்ணீர் குடிக்கலாம். இதனால், எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அதேபோல சூரிய கிரகணத்தின்போது மட்டுமல்ல, உலக்கை எப்போது நிற்க வைத்தாலும் நிற்கும்.

ஜெயமுருகன்
ஜெயமுருகன்

சூரியனின் வெளிச்சத்தை நிலவு மறைத்தால் சூரிய கிரகணம். நிலவின் வெளிச்சத்தைப் பூமி மறைத்தால் சந்திர கிரகணம். இது அறிவியல் சார்ந்த விஷயம். இதையெல்லாம் மக்களுக்கு விளக்குவதற்காகக் கிராமம்தோறும் அறிவியல் இயக்கம் மூலமாகக் கிரகணத்தின்போது வெளியில் பொங்கல் வைத்துச் சாப்பிட்டும், உலக்கையைச் செங்குத்தாக நிற்க வைத்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்'' என்றார்.

சூரிய கிரகண நேரத்தில் மட்டும்தான் உலக்கை நிற்குமா? https://bit.ly/2zVlkms

Posted by Junior Vikatan on Sunday, June 21, 2020
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு