Published:Updated:

Tamil News Today: தமிழ்நாடு நிதிநிலை; நாளை வெளியாகிறது வெள்ளை அறிக்கை!

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
Live Update
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

08-08-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

08 Aug 2021 1 PM

தமிழ்நாடு நிதிநிலை; நாளை வெளியாகிறது வெள்ளை அறிக்கை!

 வெள்ளை அறிக்கை
வெள்ளை அறிக்கை

தமிழகத்தின் கடந்த பத்தாண்டு கால வரவு, செலவு வருவாய் இழப்பு, மாநிலத்தின் கடன் நிலை பற்றிய விவரங்கள் வெளியாகிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நாளை காலை 11.30 மணிக்கு வெளியிடுகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

08 Aug 2021 8 AM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியாவில் கொரோனா நிலவரம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 39,070 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில், மொத்த கொரோனா பாதிப்பு 3,19,34,455 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 491.

கொரோனா
கொரோனா

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 3,10,99,771-ஆக இருக்கிறது. ஒரே நாளில் 43,910 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள். நேற்று மட்டும் 55,91,657 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 50,68,10,492 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.