Published:Updated:

Tamil News Today: கொரோனா தடுப்பூசி; 40,000 முகாம்களில் 20 லட்சம் பேருக்கு செலுத்திட இலக்கு!

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி ( ரா.ராம்குமார் )

12-09-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்:

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி
ரா.ராம்குமார்

தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணிக்கு தமிழக அரசின் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில் தடுப்பூசி செலுத்தாத 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40,000 முகாம்களில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் 1,600 சிறப்பு முகாம் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு