Published:Updated:

Tamil News Today: `கூடுதல் தளர்வுகளா... ஊரடங்கு நீட்டிப்பா?’ - முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

ஸ்டாலின்
ஸ்டாலின்

21-08-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

21 Aug 2021 1 PM

பள்ளிகள் திறப்பது உறுதி!

செப்டம்பர் 1-ம் தேதி 9,10,11,12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. மதுரையை அடுத்து திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்
21 Aug 2021 11 AM

`கூடுதல் தளர்வுகளா... ஊரடங்கு நீட்டிப்பா?’ - முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவடைவதை யொட்டி இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. கொரோனா 3-வது அலை குறித்த எச்சரிக்கை அனைத்து இடங்களிலும் அறிவுறுத்தப்பட்ட நிலையில் இன்று ஊரடங்கு குறித்த ஆலோசனை நடக்கிறது. பள்ளிகள், திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்த அறிவிப்புகள் ஏதேனும் வெளியாகுமா அல்லது ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மருத்துவத்துறை அமைச்சர், சுகாதாரச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு