Published:Updated:

Tamil News Today: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக்கு வாய்ப்பு! - சென்னை வானிலை ஆய்வு மையம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வடகிழக்குப் பருவமழைக்கு வாய்ப்பு!
வடகிழக்குப் பருவமழைக்கு வாய்ப்பு!

24-10-2021| இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு

24 Oct 2021 9 AM

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக்கு வாய்ப்பு! - சென்னை வானிலை ஆய்வு மையம்

மழை
மழை

வருகிற அக்டோபர் 26-ம் தேதி தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதையொட்டி அக்டோபர் 24-ம் தேதி சேலம், மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. சென்னையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அக்டோபர் 26, 27-ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் கேரள கடல் பகுதி, அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அக்டோபர் 26-ம் தேதி முதல், முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு