Published:Updated:

2022ம் ஆண்டிற்கான `குவெம்பு ராஷ்டிரிய புராஸ்கர் தேசிய விருது' பெற்ற தமிழ் எழுத்தாளர் இமையம்

இமையம்

'குவெம்பு ராஷ்டிரிய புராஸ்கர் தேசிய விருதைப் பெறும் முதல் தமிழ் எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்ற எழுத்தாளர் இமையம்.

2022ம் ஆண்டிற்கான `குவெம்பு ராஷ்டிரிய புராஸ்கர் தேசிய விருது' பெற்ற தமிழ் எழுத்தாளர் இமையம்

'குவெம்பு ராஷ்டிரிய புராஸ்கர் தேசிய விருதைப் பெறும் முதல் தமிழ் எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்ற எழுத்தாளர் இமையம்.

Published:Updated:
இமையம்
குவெம்பு என்ற தமது புனைப்பெயராலும் சுருக்கமாக கே. வி. புட்டப்பா என்றும் பரவலாக அறியப்படும் குப்பளி வெங்கடப்பகௌடா புட்டப்பா அவர்கள், கன்னட மொழியின் புகழ்பெற்ற எழுத்தாளர்.

இவரின் நினைவைப் போற்றும் வகையில் குவெம்பு அவர்களின் நினைவு அறக்கட்டளை சார்பாக, 2013ம் அண்டு முதல் 'குவெம்பு ராஷ்டிரிய புராஸ்கர் தேசிய விருது' வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த ஆண்டிற்கான (2022 ) 'குவெம்பு ராஷ்டிரிய புராஸ்கர் தேசிய விருது' சாகித்ய அகாதமி விருது பெற்ற திரு. இமையம் என்கிற வெ. அண்ணாமலை அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விருதுடன் பரிசு தொகையாக ரூ. 5 லட்சமும் வெள்ளி பதக்கமும் வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதைப் பெறுவதன் மூலம் 'குவெம்பு ராஷ்டிரிய புராஸ்கர் தேசிய விருதைப் பெறும் முதல் தமிழ் எழுத்தாளர் என்ற பெருமையையும் பெறுபவராவார் எழுத்தாளர் இமையம்.

எழுத்தாளர் இமையம்
எழுத்தாளர் இமையம்

இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள்: 2013 - சச்சிதானந்தன் - மலையாளம், 2014 - நாமவர சிங் - ஹிந்தி, 2015 - ஷியாம் மனோஹர் - மராத்தி, 2016 - தேவனூரு மகாதேவா - கன்னடம், 2017 - ஹோமென் போர்கோஹைன் மற்றும் நீலமணி ஃபுகான் - அசாமி, 2018 - ஜீலானி பானு மற்றும் ரத்தன் சிங் - உருது,
2019 - குருபஜன் சிங் மற்றும் அஜீத் கௌர் - பஞ்சாபி, 2020 - ராஜேந்திர் கிஷோர் பாண்டா - ஒடியா, 2021 – திருமதி சத்யவதி - தெலுங்கு ஆகியோராவர். அந்த வரிசையில் தற்போது 2022ம் ஆண்டிற்கான இந்த விருது எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

`கோவேறு கழுதைகள்', `ஆறுமுகம்', `செடல்', `எங் கதெ' உள்ளிட்ட நாவல்கள், `மண்பாரம்', `கொலைச்சேவல்', `சாவு சோறு', `நறுமணம்'  உள்ளிட்ட சிறுகதைத் தொகுதிகள் என இலக்கிய உலகில் தனித்த தடம் பதித்திருப்பவர் எழுத்தாளர் இமையம். எழுத்துக்காக ஏராளமான விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றவர். வாழ்த்துகள் இமையம்