Published:Updated:

`ரிப்போர்ட் கார்டு கொடுக்க நான் பெரிய ஆள் இல்லை..!' - திமுக ஆட்சி குறித்த கேள்விக்கு தமிழிசை பதில்

தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக திமுக ஆட்சி எப்படி இருக்கிறது?” என்று தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்களப் பணியாளர்களை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இதில் தெலங்கானா ஆளுநரும், பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார்.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்
100 கோடி கொரோனா தடுப்பூசி; இந்தியா கடந்துவந்த பாதை - ஒரு பார்வை!

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, ``இந்தியாவில் தற்போதுவரை 104,04,99,873 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இது மிகப்பெரிய சாதனை. தடுப்பூசிப் பணிகளில் மத்திய அரசு சிறப்பாகப் பணியாற்றிவருகிறது.

கொரோனா பணிகளில் அரசியல் விமர்சனங்கள் கூடாது. மேலும் புதுச்சேரி ஆளுநராக இருந்தாலும் அங்கிருந்து 30 சதவிகிதம் ஆக்சிஜனைத் தமிழகத்துக்கு வழங்கினோம். மீண்டும் கொரோனா ஆங்காங்கே பரவிவருகிறது. பொதுமக்கள் கண்டிப்பாக கொரோனா வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஆளுநர், அரசாங்கத்திடம் தகவலை பெறலாமா என விமர்சனம் எழுந்துள்ளது. தமிழகத்தில் அனைத்தும் அரசியலாக்கப்படுகிறது. நவம்பர் 11-ம் டெல்லியில் ஆளுநர் மாநாடு நடக்கிறது. மத்திய அரசுக்கு அனைத்து ஆளுநர்களும் தகவல் வழங்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனால்தான் ஆளுநர்கள் தகவல்களைப் பெற்றிருக்கிறோம். நானும் தெலங்கானா, புதுச்சேரி மாநில தகவல்களை பெற்றிருக்கிறேன். ஆளுநருக்குத் தகவல் அளிக்கும் விவகாரத்தில் விமர்சனங்கள் எழுந்தபோது, தமிழக அரசு சரியாக அணுகியது. ஆனால் அரசியல் கட்சிகள் மட்டுமே அனைத்தையும் விமர்சனம் செய்துவருகின்றன.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு தமிழகத்தில் கடைபிடிக்கப்படவில்லை” என்றவரிடம், ``தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக திமுக ஆட்சி எப்படி இருக்கிறது?” என்று கேட்டபோது, ``ரிப்போர்ட் கார்டு கொடுக்கும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு