Published:Updated:

`மோடி பிரதமராக வர, நாங்கள் ஓட்டு கேட்டோம்; எஸ்.வி.சேகர்..?’ - முதல்வர் பழனிசாமி காட்டம்

முதல்வர்

முதல்வர் பழனிசாமி, `இ-பாஸ் எந்தக் குறைபாடும் இல்லாமல் எளிமையாக்கப்பட்டிருக்கிறது. அதற்காகக் கூடுதலாக ஒரு குழு அமைத்திருக்கிறோம்’ என்றார்.

`மோடி பிரதமராக வர, நாங்கள் ஓட்டு கேட்டோம்; எஸ்.வி.சேகர்..?’ - முதல்வர் பழனிசாமி காட்டம்

முதல்வர் பழனிசாமி, `இ-பாஸ் எந்தக் குறைபாடும் இல்லாமல் எளிமையாக்கப்பட்டிருக்கிறது. அதற்காகக் கூடுதலாக ஒரு குழு அமைத்திருக்கிறோம்’ என்றார்.

Published:Updated:
முதல்வர்

மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை உதவிகளை வழங்குவதற்காகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் உள்ள பயனியர் மாளிகைக்கு வந்திருந்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார், ``காவிரியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாக்காமல் கடைக்கோடியில் இருக்கின்ற விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆங்காங்கே உபரியாக வெளியேறுகின்ற நீரை தடுப்பதற்காகத் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. இவையெல்லாம் நீர் மேலாண்மை மூலமாக அரசு எடுக்கும் நடவடிக்கை. பொதுமக்களுக்கு இருக்கும் பிரச்னைகளை அரசு கவனத்துக்குக் கொண்டு வருவதற்கு முதலமைச்சர் சிறப்பு குறைத் தீர்க்கும் கூட்டம் நடத்தி மக்களிடம் நேரடியாகப் புகார் மனுக்கள் வாங்கினோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதில் முதியோர் உதவித்தொகைக்கு மட்டும் 56,866 பேர் விண்ணப்பித்து இருந்தார்கள். சேலம் மாவட்டத்தில் மட்டும் 32,468 பேருக்கு முதலமைச்சர் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டத்தின் மூலமாக உதவித் தொகை கொடுத்திருக்கிறோம். அதே போல பட்டா 13,153 பேருக்கு சேலம் மாவட்டத்தில் கொடுத்திருக்கிறோம். மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக சிகிச்சை அளிக்கிறார்கள். அவர்களுக்கு 50 லட்சம் தரப்படும் என அறிவித்தோம். அது மத்திய அரசாங்கமே இன்ஷுரன்ஸ் மூலமாகத் தருவதாக அறிவித்து இருக்கிறார்கள்.

முதல்வர்
முதல்வர்

மற்ற பணியாளர்களுக்கு 10 லட்சம் என அறிவித்தோம். தற்போது 25 லட்சமாக உயர்த்தி இருக்கிறோம். பிற பணியாளர்கள் பணியின்போது தொற்று ஏற்பட்டு இறந்தால் அவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் மற்றும் அரசு வேலை தருகிறோம். மாநில அரசின் நிலைப்பாடு இருமொழிக் கொள்கை. அதைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். அதற்கு ஒரு குழு அமைத்திருக்கிறோம். கொரோனா வைரஸ் குறைந்து எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுகிறதோ அப்போது பள்ளிகள் திறக்கப்படும்.

கேரளாவில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. நம் மாநிலத்தில் உள்ள நீலகிரியில் கனமழை பெய்கிறது. நம் அமைச்சர்கள் அங்கு சென்று போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இ-பாஸ் எந்தக் குறைபாடும் இல்லாமல் எளிமையாக்கப்பட்டிருக்கிறது. அதற்காகக் கூடுதலாக ஒரு குழு அமைத்திருக்கிறோம்.

கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஒவ்வொருவரும் தனிமைப்படுத்திக்கொள்வதுதான் அதற்கான மருந்து. முகக்கவசம் அவசியம் வீட்டையும் கழிப்பறையையும், தெருவையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தால் தானாக கொரோனா குறைந்துவிடும். அரசு கூறும் வழிமுறைகளைப் பின்பற்றினால் விரைவில் இயல்பு நிலைக்கு வந்துவிடலாம்.

முதல்வர்
முதல்வர்

பிளாஸ்மா சிகிச்சைக்கு நல்ல ரிசல்ட் கிடைத்திருக்கிறது. கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும். மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் திறக்கப்படும்.

எஸ்.வி.சேகரை ஒரு கட்சித் தலைவராக நாங்கள் கருதவில்லை. பாரத பிரதமர் மோடி, இந்திய நாட்டுப் பிரதமராக வர வேண்டுமென நாங்கள் வீடு வீடாக ஓட்டுக் கேட்டோம். அவர் எந்த இடத்துக்கும் வந்து ஓட்டுக் கேட்கவில்லை. அவர் பா.ஜ.க கட்சி என்று சொல்லுகிறார். ஆனால், அந்தக் கட்சிக்காரர்கள் யாரும் அவரை அந்தக் கட்சியில் இருப்பதாகச் சொல்லவில்லை'' என்றார்.