Published:Updated:

`புதுமண தம்பதியருக்கு நண்பர்கள் தந்த வெங்காய பொக்கே!' -விலை எவ்வளவு தெரியுமா?

கடலூரில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் புதுமண தம்பதியருக்கு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து வெங்காயத்தினால் செய்த பொக்கேவைப் பரிசளித்துள்ளனர்.

வெங்காய பொக்கே
வெங்காய பொக்கே ( twitter.com )

``உன்னில் உருவான ஆசைகள் என் அன்பே.....அந்த `வெங்காய விலை' போல இறங்காதது" - சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் கவிஞர் வாலி எழுதிய சினிமா பாடல் வரிகள் இவை. ஆனால் இப்போதுள்ள காலகட்டத்துக்கும் கனகச்சிதமாகப் பொருந்துகின்றன!

வெங்காயம்
வெங்காயம்

வெங்காய விலை நாளுக்குநாள் எகிறிக்கொண்டிருக்கும் நிலையில் பிரியாணி கடை முதல் நாடாளுமன்றம் வரை இது பற்றிய பேச்சாகவேதான் இருக்கிறது. சிலர் ``நாங்கள் சமையலுக்கு வெங்காயமே பயன்படுத்துவதில்லையே..!" என்றெல்லாம் கூறி விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடலூரில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் புதுமண தம்பதியருக்கு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து வெங்காயத்தினால் செய்த பொக்கேவைப் பரிசளித்துள்ளனர். இது அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது.

வெங்காய பொக்கே
வெங்காய பொக்கே
twitter.com

கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் மணமக்கள் சப்ரீனா-ஷாகுல் ஆகியோரின் நண்பர்கள் இணைந்து வெங்காயத்தினால் செய்த அழகான பொக்கே ஒன்றைப் பரிசாக அளித்து ஃபன் செய்துள்ளனர். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிலோ ரூ.20-க்கு விற்கப்பட்ட வெங்காயம் தற்போது ரூ.150- க்கு விற்கப்படுகிறது. கடுமையான விலை உயர்வால் அதிர்ந்து போயிருக்கும் மக்களின் மனநிலையை எடுத்துரைக்கவே வித்தியாசமான இந்தப் பரிசைத் தந்ததாக பொக்கேவை அளித்த நண்பர்கள் கூறியுள்ளனர்.

`வெங்காயம் பற்றி நிதியமைச்சரின் கருத்து' - கொந்தளிக்கும் நெட்டிசன்களின் ரியாக்ஷன்ஸ்!

திருமணப் பரிசுக்காக பிரத்யேகமாக இரண்டரை கிலோ வெங்காயத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட இந்த பொக்கேவின் விலை ரூ.600!

வெங்காயம்
வெங்காயம்

இப்போதெல்லாம் வெங்காயத்தை உரித்தால் மட்டுமல்ல, அதன் விலையை நினைத்தாலே கண்ணீர் வந்துவிடுகிறது. வெங்காய விலையேற்றம் தொடர்ந்து நீடித்தால் அதைக் குழம்பில் மட்டுமல்ல, மியூசியத்தில் பார்ப்பது கூட அரிதுதான்.

இதை மனதில் கொண்டு திருமணத்தில் நண்பர்கள் கொடுத்துள்ள வெங்காய பொக்கே சிரிக்க வைப்பதுடன் சிந்திக்க வைப்பதாகவும் உள்ளது.