Published:Updated:

நெருங்கும் மழைக்காலம்; `இந்த விஷயங்களில் கவனமாக இருங்கள்..!' - அலர்ட் செய்யும் மின்வாரியம்

தமிழ்நாடு மின்சார வாரியம்

வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடக்கவிருக்கும் நிலையில், `அறுந்து கிடக்கும் மின்கம்பிகளுக்கு அருகில் பொதுமக்கள் செல்லக் கூடாது' என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியிருக்கிறது.

நெருங்கும் மழைக்காலம்; `இந்த விஷயங்களில் கவனமாக இருங்கள்..!' - அலர்ட் செய்யும் மின்வாரியம்

வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடக்கவிருக்கும் நிலையில், `அறுந்து கிடக்கும் மின்கம்பிகளுக்கு அருகில் பொதுமக்கள் செல்லக் கூடாது' என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியிருக்கிறது.

Published:Updated:
தமிழ்நாடு மின்சார வாரியம்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்கவிருக்கிறது. இருப்பினும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது தொடர்ந்து மழை பெய்துவருகிறது. மேலும், இன்று (14.10.22) முதல் 17-ம் தேதி வரை தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் வரும் நாள்களில் தமிழகத்தில் மழை அதிகரிக்கும். எனவே, இத்தகைய நாள்களில் விபத்துகளில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது எப்படி என்பது குறித்து தமிழ்நாடு மின்வாரியம் சில அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது.

மழை
மழை

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு மின்சார வாரிய உயரதிகாரி ஒருவர், ``மின்கம்பிகளுக்கு அருகிலுள்ள மரக்கிளைகளை அகற்றுவதற்கு முன்பு, மின்வாரியப் பிரிவு அலுவலகத்தைத் தொடர்புகொள்ள வேண்டும். மின்கம்பிகள் அறுந்து கிடந்தால், அதன் அருகில் செல்லக் கூடாது. உடனே அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

ட்ரான்ஸ்ஃபார்மர், மின்கம்பம், மின் விநியோகப் பெட்டி, டிரான்ஸ்ஃபார்மர் வைக்கப்பட்டிருக்கும் கம்பம் அருகிலுள்ள 'ஸ்டே ஒயர்' ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது. மின்கம்பத்திலோ, அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளைக் கட்டக் கூடாது. மின்கம்பம், மின்கம்பி, ட்ரான்ஸ்ஃபார்மரை தாங்கியுள்ள கம்பத்தில் துணிகளைக் காயவைக்கக் கூடாது.

புயலால் சரிந்த மின்கம்பம்
புயலால் சரிந்த மின்கம்பம்

மின் விநியோக சாதனங்களுக்கு அருகில் யாரும் செல்லக் கூடாது. மழைத் தண்ணீர் புகுந்த வீடுகளில் ஈரம் முழுவதுமாக வடிந்த பின்னர்தான் மின் சாதனங்களை இயக்க வேண்டும். ஈரக் கைகளால் ஸ்விட்சை தொடக் கூடாது. மின்கம்பம் சேதமடைந்திருந்தாலோ, மின்கம்பி தாழ்வாகத் தொங்கினாலோ, உடனே அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். மின்தடை உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான புகார்களை மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தில் `94987 94987' என்ற எண்ணில் 24 மணி நேரமும் தெரிவிக்கலாம்" என்றார்.