Published:Updated:

``ஒலிம்பிக் ரேவதி இளைய சமுதாயத்துக்கு நம்பிக்கையை விதைத்திருக்கிறார்’’ - நிதியமைச்சர் பேச்சு

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ரேவதி, தனக்கான புதிய பாதையை வகுத்துக்கொண்டவர். மிகச் சாதாரண பின்புலத்தில் பிறந்து, தற்போது அவர் அடைந்திருக்கும் உச்சம் என்பது ஒப்பீட்டளவில் உயர்ந்த இடத்தில் தோன்றி அதைவிட உயர்வான இடத்தை அடைவதைக் காட்டிலும் மிகக் கடினமானது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தமிழகத்துக்கு குறிப்பாக, மதுரைக்குப் பெருமை சேர்த்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணிக்கு அவர் கல்வி பயின்ற டோக் பெருமாட்டி கல்லூரியில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகாரஜன் ஆகியோர் கலந்துகொண்டார்கள். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, ``ஒலிம்பிக் போட்டி என்பது உலக அளவில் விளையாட்டுத் துறையின் உச்சத்தைக் குறிக்கிறது. அதனடிப்படையில் ஒருவர் அந்தப் போட்டியில் கலந்துகொள்ளத் தகுதி பெறுவது என்பதே அவரைப் பலருக்கு முன்னுதாரணம் ஆக்குகிறது.

நிதியமைச்சர்
நிதியமைச்சர்
`` நிதிநிலையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதே அரசின் நோக்கம்''- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

எனவே, ரேவதி தன் மிகப்பெரிய பங்களிப்பின் மூலமாக, தமிழ்நாட்டிலுள்ள பல பெண்களுக்கு, இளைஞர்களுக்கு அவர் நம்பிக்கையை விதைத்திருக்கிறார். தவிர ரேவதியிடம் சில தனித்துவங்கள் உள்ளன. பெரும்பாலும் வாழ்வு ஒருவருக்கு எங்கிருந்து தொடங்குகிறது என்பது அவரது எல்லையை நிர்ணயிக்கிறது. எனவே, என்னைப் போன்ற நல்ல கல்வி, பொருளாதாரச் சூழல், முன்னோர்களின் பின்புலமுள்ள வெகு சிலருக்கு நான் இன்று இருக்கும் நிலையை அடைவது என்பது பெரிய விஷயம் இல்லை. ஆனால் ரேவதி தனக்கான புதிய பாதையை வகுத்துக்கொண்டவர், மிகச் சாதாரண பின்புலத்தில் பிறந்து தற்போது அவர் அடைந்திருக்கும் உச்சம் என்பது ஒப்பீட்டளவில் உயர்ந்த இடத்தில் தோன்றி அதைவிட உயர்வான இடத்தை அடைவதைக் காட்டிலும் மிகக் கடினமானது.

ரேவதி தான் தொடங்கிய இடத்திலிருந்து இன்று அடைந்திருக்கும் உச்சம் என்பது அசாதாரணமானது. அதற்காக நான் அவரை வாழ்த்துகிறேன். அவரை இந்தநிலைக்கு உயர்த்தப் பாடுபட்ட அவருடைய பயிற்சியாளர், அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். நம்மைப்போல மிகப்பெரிய மக்கள்தொகை உள்ள நாட்டில் மிகச் சிலரே இதுபோல விளையாட்டுத்துறையைத் தேர்வு செய்வது என்பது நமது சமூகத்தின் சரியான பிரதிபலிப்பு இல்லை. ஆனால் நல்வாய்ப்பாக, தமிழகத்திலிருந்து ஒலிம்பிக்கில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

ரேவதியுடன் பழனிவேல் தியாகராஜன்
ரேவதியுடன் பழனிவேல் தியாகராஜன்

வீராங்கனை ரேவதி மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்வார் என நம்புகிறோம். நமது முதல்வர் முந்தைய அரசாங்கங்களைவிட ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களுக்கு அதிகமான நிதி உதவி, பரிசுகள், அரசு வேலைவாய்ப்புகளை வழங்கியிருக்கிறார். தொடர்ந்து நமது இளைஞர்கள் தங்களின் திறமையை வளர்த்துக்கொள்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கும் அளவுக்கு நாம் பணியாற்ற வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு