Published:Updated:

தமிழக அரசின் கனவு இல்லத் திட்டம்; பத்து எழுத்தாளர்களுக்கு வீடு!

இமையம், சு. வெங்கடேசன், ஈரோடு தமிழன்பன்

2021-22ம் ஆண்டிற்கான கனவு இல்லத் திட்டத்திற்கு மேலும் பத்து தமிழ் எழுத்தாளர்களைத் தேர்வு செய்து அரசாணை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.

தமிழக அரசின் கனவு இல்லத் திட்டம்; பத்து எழுத்தாளர்களுக்கு வீடு!

2021-22ம் ஆண்டிற்கான கனவு இல்லத் திட்டத்திற்கு மேலும் பத்து தமிழ் எழுத்தாளர்களைத் தேர்வு செய்து அரசாணை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.

Published:Updated:
இமையம், சு. வெங்கடேசன், ஈரோடு தமிழன்பன்

கலைஞர் அவர்களின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 3.6.2021அன்று, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், "தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்" என்ற 'கனவு இல்லத் திட்டம்' ஒன்றை அறிவித்திருந்தார். இதன்படி, இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் எழுத்தாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் வீடுகள் வழங்கப்படும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இதில், 2021-22ம் ஆண்டிற்கான கனவு இல்லத் திட்டத்திற்கு, சாகித்ய அகாதமி விருது மற்றும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற திரு. ந.செகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பன், சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞர் புவியரசு என்கிற சு. ஜகன்னாதன். கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற முனைவர் இ. சுந்தரமூர்த்தி, சாகித்ய அகாதமி விருது பெற்ற திரு. பூமணி என்கிற பூ.மாணிக்கவாசகம், கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற முனைவர் கு. மோகனராசு, சாகித்ய அகாதமி விருது பெற்ற திரு. இமையம் என்கிற வெ. அண்ணாமலை ஆகிய ஆறு எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பிற்கான ஒதுக்கீட்டு ஆணைகள் 3.6.2022 அன்றே வழங்கப்பட்டது.

செய்தி வெளியீடு
செய்தி வெளியீடு
இந்நிலையில் தற்போது, 2021-22ஆம் ஆண்டிற்கான கனவு இல்லத் திட்டத்திற்கு மேலும் பத்து தமிழ் எழுத்தாளர்களைத் தேர்வு செய்து அரசாணை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.

அதன்படி, 2022-2023ஆம் ஆண்டிற்கான கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 2005 இல்லம் ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற திருமதி ஜி. திலகவதி, 2011 ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற திரு. பொன். கோதண்டராமன், 2011 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன். 2013 ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற திரு. ப. மருதநாயகம், 2015 ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற திரு. மறைமலை இலக்குவனார், 2015-16 ஆம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது பெற்ற மருத்துவர் முனைவர் இரா. கலைக்கோவன், 2018 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற திரு. எஸ். இராமகிருஷ்ணன், 2016 ஆம் ஆண்டு கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது பெற்ற திரு. கா. ராஜன், 2013 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற திரு. ஆர்.என்.ஜோ.டி. குருஸ், 2016 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற திரு. சி. கல்யாணசுந்தரம் (வண்ணதாசன்) ஆகிய பத்து தமிழ் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.