Published:Updated:

`ஞாயிறு முழு ஊரடங்கில் மருந்துகள், பால் டெலிவரி செய்ய மின் வணிக நிறுவன சேவைக்கு அனுமதி!’ -தமிழக அரசு

டெலிவரி
News
டெலிவரி

ஜனவரி 16- ம் தேதி முழு ஊரடங்கின் போது மருந்துகள், பால் டெலிவரி செய்ய மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கைப் பிறப்பித்ததும், பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்துள்ளது.

தமிழக அரசு
தமிழக அரசு

இந்தநிலையில் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கின் போது மருந்துகள் மற்றும் பால் டெலிவரி செய்ய மின் வணிக நிறுவனங்களின் சேவை அனுமதிக்கப்படும் என்றும் இதற்கு காவல் துறையினர் ஒத்துழைப்பு தருவார்கள் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz