Published:Updated:

கொரோனா: `தமிழகத்தில் விடுப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 444’ - மருத்துவர் குழு அறிக்கை தாக்கல்

ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

``இந்த உயிரிழப்புகள் கொரோனா வைரஸால் ஏற்படவில்லை என மருத்துவர்கள் கூறியிருந்த போதிலும், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி இந்த எண்ணிக்கைகள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன.”

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை சுமார் 1,80,643 பேர் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். பாதிப்படைந்தவர்களில் சுமார் 1,26,670 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில் சுமார் 51,347 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பால் 2,626 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பான தகவல்களைத் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தினசரி தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் தகவலில் எண்ணிக்கைகள் விடுபட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா
கொரோனா

தமிழகத்தில் விடுப்பட்ட மரணங்கள் தொடர்பான அறிக்கையை மருத்துவர் வடிவேலன் தலைமையிலான குழு தாக்கல் செய்துள்ளது. இதன்படி, மார்ச் 1-ம் தேதி முதல் விடுப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 444 என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு வெளியிடப்படும் கொரோனா வைரஸ் குறித்த தகவல்களில் இந்த எண்ணிக்கைகள் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ``இந்த உயிரிழப்புகள் கொரோனா வைரஸால் ஏற்படவில்லை என மருத்துவர்கள் கூறியிருந்த போதிலும், உலக சுகாதார அமைப்பு மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி இந்த எண்ணிக்கைகள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன. கொரோனா பரிசோதனை முடிவு அறிக்கை வருவதற்கு முன்பு இறந்தவர்கள், கொரோனாவால் பாதிப்படைந்து வேறு நோய் பாதிப்பால் இறந்தவர்கள் எனப் பல்வேறு காரணங்களால் இறந்தவர்களையும் இந்தக் கணக்கில் சேர்த்துள்ளோம்” எனத் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ரோட்டில் குவிந்த கொரோனா நோயாளிகள்; பதறிய சுகாதாரத் துறையினர்! - ஊட்டி சர்ச்சை
அடுத்த கட்டுரைக்கு